சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலில் மோடி அரசின் அழுத்தத்தால் சில பகுதிகளை நீக்கும் பதிப்பகம்: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலில் மோடி அரசின் அழுத்தத்தால் சில பகுதிகளை நீக்கும் பதிப்பகம்: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: மோடி அரசின் அழுத்​தம் காரண​மாக காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி​யின் வாழ்க்கை வரலாற்று நூலில் சில பகு​தி​களை பதிப்​பகத்​தார் நீக்க இருப்​ப​தாக தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் வெளி​யிட்ட அறிக்​கை​: பெங்​கு​யின் வேர்ல்ட்​வைட் நிறு​வனம், சோனியா காந்​தி​யின் வாழ்க்கை வரலாற்று நூலை எந்​த​வித மாற்​ற​மும் செய்​யாமல், உலகம் முழு​வதும் அதன் அசல் வடி​விலேயே வெளி​யிடத் தயா​ராக உள்​ளது.

ஆனால், இந்​தி​யா​வில் அதை வெளி​யிடு​வதற்​கு, பதிப்பு நிறு​வனம் சில மாற்​றங்​களைச் செய்ய விரும்​பு​கிறது. உலகம் முழு​வதும் அசல் வடி​வில் வெளி​யிடப்​படும் ஒரு நூலை இந்​தி​யா​வில் மட்​டும் அப்​படியே வெளி​யிட முடி​யாததற்கு என்ன காரணம்? சோனியா காந்​தி​யின் வாழ்க்​கை​யானது தியாகத்​துக்​கும், அர்ப்​பணிப்​புக்​கும் ஒரு சிறந்த எடுத்​துக்​காட்​டு.

அவர் நாட்​டுக்​காக ஆற்​றிய பணி​யின் தூய்​மை​யும் கண்​ணி​ய​மும் போற்​றத்​தக்​கது. இப்​படிப்​பட்ட சிறப்​பு மிக்க, மூத்த அரசி​யல் தலை​வர் மற்​றும் முன்​னாள் எதிர்க்​கட்​சித் தலை​வ​ரான சோனியா காந்​தி​யின் புத்​தகத்தை அழுத்​தம் கொடுத்து தடுத்து நிறுத்​து​வது கருத்​துச் சுதந்​திரத்​தையே படு​கொலை செய்​வதற்கு நிக​ரானது.

உண்​மை​யான பிரச்​சினை என்​ன​வென்​றால், மோடி ஆட்​சிக் காலத்​தில் இந்​தி​யப் பகு​தி​களை மோடி, ஆர்​எஸ்​எஸ் மற்​றும் சீனா ஆக்​கிரமித்​தது தொடர்​பான பகு​தி​களை புத்​தகத்​தி​லிருந்து நீக்​கு​மாறு பெங்​கு​யின் நிறு​வனம் மீது அழுத்​தம் கொடுக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

இந்த உண்​மையை இந்​திய மக்​களிட​மிருந்து ஏன் மறை​க்க வேண்​டும், அழுத்​தத்​தின் பேரில் உண்​மை​களை மாற்​று​மாறு பதிப்​பகங்​களை​யும் மோடி அரசு நிர்​பந்​திக்​கு​மா? இவ்​​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலில் மோடி அரசின் அழுத்தத்தால் சில பகுதிகளை நீக்கும் பதிப்பகம்: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
சுபமுகூர்த்த தினமான ஆக.31-ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in