விருதுநகர் அருகே பொது இடம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விருதுநகர் அருகே பொது இடம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி  ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
Updated on: 
1 min read

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியல் பொது இடம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.

சிவகாசி அருகே உள்ளார் நமஸ்கரித்தான்பட்டியல் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள பொது இடம் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற சமூகத்தினர் அந்த வழியாக செல்ல எதிர்ப்பு தெரிவித்து, கயிறு கட்டி பொது இடத்தை மறித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறும் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கும் கிராமத்தில் உள்ள மொத்த சமூகத்தினருக்கும் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொது இடம் மற்றும் பொது பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றக் கோரி நமஸ்கரித்தான்பட்டியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “கிராமத்தின் மையப் பகுதியில் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள பொது இடம் மற்றும் பொது பாதை வழியாகவே அனைத்து சமுதாய மக்களும் சென்று வருகிறோம். கடந்த 11 ஆண்டுகளாக பாதை ஆக்கிரமிப்பு செய்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. தற்போது முழுவதுமாக கயிறு கட்டி பொது இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பலமுறை வருவாய்த்துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய தீர்வு கண்டு பொதுப் பாதை ஆக்கிரமிப்பு அகற்றி, மக்களின் பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

விருதுநகர் அருகே பொது இடம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி  ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
‘மல்டி லெவல் கார் பார்க்கிங்’ திட்டம்: கொடைக்கானலில் அம்மா உணவகம், பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in