‘மல்டி லெவல் கார் பார்க்கிங்’ திட்டம்: கொடைக்கானலில் அம்மா உணவகம், பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றம்

‘மல்டி லெவல் கார் பார்க்கிங்’ திட்டம்: கொடைக்கானலில் அம்மா உணவகம், பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றம்
Updated on: 
1 min read

பழநி: ‘மல்டி லெவல் கார் பார்க்கிங்’ திட்டத்துக்காக, கொடைக்கானலில் நகராட்சி சார்பில் முதல்கட்டமாக அம்மா உணவகம், பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கலையரங்கம் பகுதியில் இரண்டரை ஏக்கரில் வணிக வளாகத்துடன், 450 வாகனங்கள் நிறுத்தும் வகையில் ‘மல்டி லெவல் கார் பார்க்கிங்’ அமைக்க நகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, முதல்கட்டமாக தேவையான இடத்தை கையகப்படுத்தும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.

தற்போது கலையரங்கம் பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தால் ஏராளான வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், இங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அதன் பிறகு, கடைகளை காலி செய்யவும், இடத்தை கையகப்படுத்தவும் வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கோரிக்கையை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மாற்று இடம் கொடுக்காமலும், வியாபாரிகளின் எதிர்ப்பை மீறி, கலையரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகம், பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல, அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

‘மல்டி லெவல் கார் பார்க்கிங்’ திட்டம்: கொடைக்கானலில் அம்மா உணவகம், பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றம்
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்யக்கோரி விருதுநகரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in