ஆகமக் கோயில்கள் கண்டறியும் அறிக்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: அறநிலையத் துறை அழைப்பு

ஆகமக் கோயில்கள் கண்டறியும் அறிக்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: அறநிலையத் துறை அழைப்பு
Updated on
1 min read

சென்னை: ‘தமி​ழ​கத்​தில் ஆகம விதி​களின்​படி நிர்​மாணிக்​கப்​பட்ட கோயில்​களைக் கண்​டறி​யும் குழு​வின் அறிக்​கை​கள் குறித்​து, பொது​மக்​கள் தங்​கள் கருத்​துகளைத் தெரிவிக்​கலாம்’ என்று இந்து சமய அறநிலை​யத்​ துறை அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அறநிலை​யத்​துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை உயர் நீதி​மன்​றம் மற்​றும் உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தர​வு​களின்​படி, இந்து சமய அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில், ஆகம விதி​களின்​படி கட்​டப்​பட்ட கோயில்​களைக் கண்​டறிய தமிழக அரசால் கடந்த 2022 அக்​.6-ம் தேதி 5 பேர் கொண்ட வல்​லுநர் குழு அமைக்​கப்​பட்​டது.

இக்​குழு​விடம், அறநிலை​யத் துறை மண்டல இணை ஆணை​யர்​கள் மற்​றும் உதவி ஆணை​யர்​கள் மூல​மாக கோயில்​களின் ஆகம விவரங்​கள் சமர்ப்​பிக்​கப்​பட்​டன. அந்த அறிக்​கை​களை ஆய்வு செய்த இக்​குழு, முதற்​கட்​ட​மாக 34,971 கோயில்​கள் தொடர்​பான விவரங்​களைப் பரிசீலனை செய்​துள்​ளது.

தற்​போது இக்​கோ​யில்​கள் குறித்த விவரங்​கள் இந்து சமய அறநிலை​யத் துறை​யின் அதி​காரப்​பூர்வ இணை​யதளத்​தில் (www.hrce.tn.gov.in) வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இந்த விவரங்​களில் ஏதே​னும் விடு​படல்​கள் இருந்​தாலோ, கருத்​துருக்​கள் இருந்​தாலோ அவற்றை பொது​மக்​கள் தெரிவிக்​கலாம்.

அந்​த வகை​யில், இந்த அறி​விப்பு வெளி​யான நாளில் இருந்து 30 நாட்​களுக்​குள், கோயில்​கள் குறித்த தங்​களது கருத்​துகள் மற்​றும் கூடு​தல் விவரங்​களை தபால் மூலம், ‘ஆணை​யர் அலு​வல​கம், இந்து சமய அறநிலை​யத்​துறை, 119, உத்​தமர் காந்தி சாலை, நுங்​கம்​பாக்​கம், சென்​னை-34’ என்ற முகவரிக்கு அனுப்​பலாம். மேலும், துறை​யின் அதி​காரப்​பூர்வ இணை​யதளத்​தி​லும் மக்கள் தங்களது கருத்​துகளைத் தெரிவிக்கலாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

ஆகமக் கோயில்கள் கண்டறியும் அறிக்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: அறநிலையத் துறை அழைப்பு
முதல்வர் விஜய் உத்தரவின்படி நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க 4 அமைச்சர்கள் டெல்லி விரைந்தனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in