முதல்வர் விஜய் உத்தரவின்படி நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க 4 அமைச்சர்கள் டெல்லி விரைந்தனர்

கும்பகோணத்தில் இருந்து சென்ற 36 பேரைத் தேடும் பணி தீவிரம்
முதல்வர் விஜய் உத்தரவின்படி நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க 4 அமைச்சர்கள் டெல்லி விரைந்தனர்
Updated on
2 min read

சென்னை/கும்பகோணம்: நே​பாள வெள்​ளத்​தில் சிக்​கிய தமி​ழர்​களை மீட்க முதல்வர் விஜய் உத்தரவின்படி ஆதவ் அர்​ஜூனா உட்பட 4 அமைச்​சர்​கள் நேற்று டெல்​லி விரைந்தனர். மேலும் கும்​பகோணத்​தில் இருந்து சென்ற 36 பேரை மீட்​கும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது.

நேபாள வெள்ளத்தில், தஞ்​சாவூர், திரு​வாரூர், மயி​லாடு​துறை உள்​ளிட்ட பல மாவட்​டங்​களைச் சேர்ந்த 57 பேர், கும்​பகோணத்​தைச் சேர்ந்த ‘சூப்​பர் யாத்ரா டிராவல்​ஸ்’ நிறு​வனம் மூலம் கடந்த 23-ம் தேதி இரவு கைலாய யாத்​திரைக்​குச் சென்​றுள்​ளனர். அவர்​களும் வெள்​ளத்​தில் சிக்கி உள்​ளனர். எனினும், வெள்​ளத்​தில் இருந்து தப்​பிய 20 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

இதற்​கிடை​யில், வெள்​ளத்​தில் சிக்​கிய​வர்​களில் கடலூரைச் சேர்ந்த திரு​மாவளவன் (62) என்​பவர் நேற்று பாது​காப்​பாக மீட்​கப்​பட்​டார். மீட்​கப்​பட்ட 21 பேரும் தற்​போது திரிசூலி பகு​தி​யில் பாது​காப்​பாகத் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். மீத​முள்​ள 36 பேரைத் தேடும் பணி​யில் இந்​தி​யா, நேபாளம், சீனா ஆகிய 3 நாடு​களைச் சேர்ந்த 15-க்​கும் மேற்​பட்ட ஹெலி​காப்​டர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில், நேபாளத்​தில் சிக்​கி​யுள்ள தமி​ழர்​களை மீட்​பது தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் முதல்​வர் விஜய் தலை​மை​யில் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நேபாளத்​துக்​குத் தமி​ழ​கத்​தைச் சேர்ந்த 103 பேர் கைலாஷ் யாத்​திரைக்​காக 2 குழுக்​களாகச் சென்​றுள்​ளனர்.

நேபாளத்​தில் ஏற்​பட்ட வெள்​ளப்​பெருக்​கில் தமி​ழர்​கள் உட்பட பலர் காணா​மல் போயுள்ளனர். இப்​பேரிடரில் சிக்​கி​யுள்ள தமி​ழர்​களை மீட்க மத்​திய வெளி​யுறவுத் துறை, நேபாளத்​தில் உள்ள இந்​தி​யத் தூதரகம், டெல்லி தமிழ்​நாடு இல்ல அரசு உயர் அலு​வலர்​கள் மற்​றும் பயண முகவர் நிறு​வனங்​களின் உதவி​யுடன் துரித நடவடிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

டெல்லி தமிழ்​நாடு இல்ல உள்​ளுறை ஆணை​யர் ஆசிஷ் குமார் தலை​மையி​லான குழு​வினர் நேபாளத்​துக்கு சென்று மீட்​புப் பணி​களை ஒருங்​கிணைக்க முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டார். மீட்​கப்​பட்​டுள்ள 21 தமி​ழர்​களை தாயகம் அழைத்து வர ஏற்​பாடு​ செய்​ய​வும், தொடர்பு கொள்ள இயலாதவர்​களின் நிலை​யைக் கண்​டறிந்து மீட்​புப்பணி​களைத் துரிதப்​படுத்​த​வும் உத்​தர​விட்​டுள்​ளார்.

பொதுப்​பணித் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜூ​னா, பள்​ளிக் கல்வி அமைச்​சர் ராஜ்மோகன், வெளி​நாடு வாழ் தமி​ழர் நலத்​துறை அமைச்​சர் க.தென்​னரசு, வேளாண் துறை அமைச்​சர் ர.வினோத் மற்​றும் அயல​கத் தமி​ழர் நலன் மற்​றும் மறு​வாழ்​வுத் துறை இயக்​குநர் ரெ.சதீஸ் ஆகி​யோர் டெல்லி தமிழ்​நாடு இல்​லத்​தில் முகாமிட்​டு, மீட்​புப் பணி​கள் தொடர்​பான நடவடிக்​கை​களை மேற்​பார்​வை​யிடு​வதுடன், நேபாளத்​தில் இருந்து மீட்​கப்​பட்ட தமி​ழர்​களுக்​குத் தேவை​யான மருத்​துவ உதவி​கள் வழங்​க​வும், அவர்​களைப் பத்​திர​மாகத் தமி​ழ​கம் அழைத்து வரவும் நடவடிக்​கை​களை மேற்​கொள்ள முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். இவ்​வாறு தமிழக அரசு அறிக்​கை​யில் கூறப்பட்டுள்ளது. அதன்படி 4 அமைச்சர்களும் நேற்று டெல்லி விரைந்தனர்.

முதல்வர் விஜய் உத்தரவின்படி நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க 4 அமைச்சர்கள் டெல்லி விரைந்தனர்
நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்வு: மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in