விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி62 திசை மாறியது: ஆய்வு நடந்து வருவதாக இஸ்ரோ விளக்கம்

விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி62 திசை மாறியது: ஆய்வு நடந்து வருவதாக இஸ்ரோ விளக்கம்
Updated on
1 min read

சென்னை: ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து நேற்று விண்​ணில் செலுத்​தப்​பட்ட பிஎஸ்​எல்​வி-சி62 ராக்​கெட், தொழில்​நுட்​பக் கோளாறு காரண​மாக திட்​ட​மிட்ட இலக்கை சென்​றடை​யாமல் திசை மாறியது. ராக்​கெட்​டின் 3-வது நிலை​யில் பிரச்​சினை கண்​டறியப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து ஆய்வு செய்​யப்​பட்டு வரு​வ​தாக இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய பாது​காப்​புத் துறை​யின் பயன்​பாட்​டுக்​காக பாது​காப்பு ஆராய்ச்​சி, மேம்​பாட்டு நிறு​வனம் (டிஆர்​டிஓ) உரு​வாக்​கி​யுள்ள இஓஎஸ்​-என்1 (அன்​விஷா) என்ற அதிநவீன செயற்​கைக் கோள், சென்னை ஆர்​பிட் ​எய்டு ஸ்டார்ட்​-அப் நிறு​வனம் தயாரித்​துள்ள ‘ஆயுள்​சாட்’ செயற்​கைக் கோள், ஸ்பெ​யின் நாட்​டின் ஸ்டார்ட்​-அப் நிறு​வனம் உரு​வாக்​கிய ‘கிட்’ எனும் பூமிக்கு மீண்​டும் திரும்பி வரும் விண்​கலம் உள்​ளிட்ட 15 செயற்​கைக் கோள்​களை பிஎஸ்​எல்​வி-சி62 ராக்​கெட் மூலம் நேற்று காலை விண்​ணில் செலுத்த இஸ்ரோ திட்​ட​மிட்​டிருந்​தது.

புவி கண்​காணிப்பு மற்​றும் ராணுவப் பாது​காப்​புக்​கான தரவு​களை நிகழ்​நேரத்​தில் வழங்​கக்​கூடிய வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டிருந்த இஓஎஸ்​-என்1 செயற்​கைக் கோளை 505 கி.மீ. தொலைவு கொண்ட சூரிய ஒத்​திசைவு சுற்​றுப்​பாதை​யில் நிலைநிறுத்த இஸ்ரோ விஞ்​ஞானிகள் திட்​ட​மிட்​டிருந்​தனர். பிஎஸ்​எல்​வி-சி62 ராக்​கெட் 44.4 மீட்​டர் உயரம் கொண்​டது. 2 திரவ எரிபொருள் இன்​ஜின், 2 திட எரிபொருள் இன்​ஜின் என மொத்​தம் 4 நிலைகளை உள்​ளடக்​கியது.

இந்​நிலை​யில், திட்​ட​மிட்​டபடி ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து 15 செயற்​கைக் கோள்​களு​டன் பிஎஸ்​எல்​வி-சி62 ராக்​கெட் நேற்று காலை 10.18 மணிக்கு விண்​ணில் ஏவப்​பட்டது. புறப்​பட்ட 8 நிமிடங்​களில் முதல் 2 நிலைகள் வெற்​றிகர​மாக விடுவிக்​கப்​பட்​டன. பின்​னர் 3-ம் நிலை​யான பிஎஸ் 3 அமைப்பு செயல்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டது.

அப்​போது, எதிர்​பா​ராத​வித​மாக ராக்​கெட்​டில் தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்​ட​தாக தெரிகிறது. திட்​ட​மிட்ட இலக்​கை​விட்டு திசை மாறிய ராக்​கெட், அடுத்த சில நிமிடங்​களில் கட்​டுப்​பாட்டு மையம் உடனான தொடர்பை இழந்​தது. இதையடுத்​து, இத்​திட்​டத்தை வெற்​றிகர​மாக நிறைவேற்ற முடிய​வில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் கூறும்​போது, ‘‘பிஎஸ்​எல்​வி-சி62 ராக்​கெட்​டின் 3-வது நிலை​யின் செயல்​பாடு​கள் இறுதி வரை திட்​ட​மிட்​டபடிநிகழ்ந்​தன.

ஆனால், அதன் பின்​னர், நிர்​ண​யிக்​கப்​பட்ட பாதை​யில் இருந்து ராக்​கெட் வில​கியது. இதுகுறித்து முழு​மை​யாக ஆய்வு செய்​து, பின்​னர் தகவல் தெரிவிக்​கப்​படும்’’ என்​றார்.

கடந்த 2025 மே மாதம், புவிகண்​காணிப்பு செயல்​பாடு​களுக்​காக அதிநவீன இஓஎஸ்​-09 ரிசாட்​-1பி என்ற செயற்கைக் கோளை விண்​ணில் நிலைநிறுத்​து​வதற்​காக அனுப்​பப்​பட்ட பிஎஸ்​எல்​வி-சி61 ராக்​கெட்​டும் நிர்​ண​யிக்​கப்​பட்ட இலக்கை சென்​றடைய​வில்​லை. அதிலும்​ 3-வது நிலை​யில்​தான்​ பிரச்​சினை ஏற்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி62 திசை மாறியது: ஆய்வு நடந்து வருவதாக இஸ்ரோ விளக்கம்
‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை வடக்கு ரயில் பாதை: 5 மில்லியன் டாலர் இந்திய நிதியுதவியில் சீரமைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in