‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை வடக்கு ரயில் பாதை: 5 மில்லியன் டாலர் இந்திய நிதியுதவியில் சீரமைப்பு

இலங்கையில் வடக்கு ரயில் பாதை மறுசீரமைப்புப் பணி களை தொடங்கிவைத்த இந்திய தூதர் சந்தோஷ் ஜா, இலங்கை போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்க.

இலங்கையில் வடக்கு ரயில் பாதை மறுசீரமைப்புப் பணி களை தொடங்கிவைத்த இந்திய தூதர் சந்தோஷ் ஜா, இலங்கை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க.

Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கையில் ‘டிட்​வா’ புய​லால் பாதிக்​கப்​பட்ட வடக்கு ரயில் பாதையை 5 மில்​லியன் டாலர் இந்​திய நிதி​யுத​வி​யில் மறுசீரமைப்பு செய்​யும் பணி​கள் தொடங்​கி​யுள்​ளன. கடந்த டிசம்​பர் மாதத் தொடக்​கத்​தில் ‘டிட்​வா’ புயல் இலங்கையைத் தாக்​கியது. இதில் 643 பேர் உயி​ரிழந்​தனர்.

ஆயிரக்​கணக்​கானோர் காயமடைந்​தனர். மேலும், அந்​நாட்​டில் பெரும் சேதத்​தை​யும் ஏற்​படுத்​தி​யது. ஏற்​கெனவே, பொருளா​தார பின்​னடைவைச் சந்​தித்​துள்ள நிலை​யில், இந்த ‘டிட்​வா’ புயல் பேரிட​ரால் ஏற்​பட்ட சேதத்தை சீர்​படுத்த முடி​யாத நிலை இலங்கைக்கு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, உலக நாடு​கள், உலக வங்கி மற்​றும் சர்​வ​தேச நாணய நிதி​யம் உள்​ளிட்​ட​வை​களிடம் இருந்து இலங்கை கடன் உதவி கோரியது. அந்த வகை​யில், ‘டிட்​வா’ புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்கைக்கு உதவிடும் வகை​யில் இந்​திய அரசு ‘ஆபரேஷன் சாகர் பந்த்’ என்ற திட்​டத்​தின்​கீழ் நிவாரண உதவி​களைச் செய்​தது.

மேலும், பிரதமர் நரேந்​திர மோடி​யின் சிறப்பு தூத​ராக மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்சங்​கர் இலங்கை சென்​றார். அங்கு புய​லால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களைப் பார்​வை​யிட்​டதுடன், அந்​நாட்டு அதிபர் அநுர குமார திசா​நாயக்​கவை​யும் அவர் சந்​தித்​தார்.

அதைத்​தொடர்ந்​து, ‘டிட்​வா’ புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்கைக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதி​யுத​வியை இந்​தியா வழங்​கியது. இது, ரூ.3,150 கோடி சலுகை கடன், ரூ.900 கோடி மானி​யங்​கள் என்​றும், இந்த நிதி​யுதவி புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்கையை மறுசீரமைப்பு செய்ய பயன்​படுத்​தப்​படும் என்​றும் அறிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், இந்​தியா அளித்த நிதி​யுத​வியி​லிருந்து 5 மில்​லியன் அமெரிக்க டாலர் தொகை மதிப்​பில், இலங்கை​யின் வடக்கு ரயில் பாதை மறுசீரமைப்​புப் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

இதனை இலங்கைக்கான இந்​தி​யத் தூதர் சந்​தோஷ் ஜா, இலங்கையின் போக்​கு​வரத்​து, நெடுஞ்​சாலைகள் மற்​றும் நகர்ப்​புற மேம்​பாட்டு அமைச்​சர் பிமல் ரத்​நாயக்க ஆகியோர் தொடங்கிவைத்​தனர்.

இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்​தி​யத் தூதரகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், “டிட்வா புய​லால் இலங்கை வடக்கு ரயில் பாதை​யின் சேதமடைந்த பகு​தி​களை மீட்​டெடுப்​ப​தற்கு இந்​திய நிதி உதவி உதவும். மேலும் இதன்​மூலம் அத்​யா​வசிய போக்​கு​வரத்து சேவை​கள் மீட்​டெடுக்​கப்​படும்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>இலங்கையில் வடக்கு ரயில் பாதை மறுசீரமைப்புப் பணி களை தொடங்கிவைத்த இந்திய தூதர் சந்தோஷ் ஜா, இலங்கை போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்க.</p></div>
நாளை மகரஜோதி திருவிழா: திருஆபரணம் பந்தளத்தில் இருந்து புறப்பட்டது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in