நீட் எதிர்ப்பு: கோவையில் 3-ம் நாளாக போராட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் முன்னெச்சரிக்கையாக தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார். | படங்கள்: ஜெ.மனோகரன் |

கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் முன்னெச்சரிக்கையாக தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார். | படங்கள்: ஜெ.மனோகரன் |

Updated on
1 min read

கோவை: நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கோவையில் நேற்று 3-ம் நாளாக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மாநகர் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்​தியும் நாடு முழுவதும் மாணவர் அமைப்​பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி​யினர் போராட்டம் நடத்தி வருகின்​றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் முன்னெச்​சரிக்கை நடவடிக்​கையாக பல்வேறு பகுதி​களில் போலீஸார் குவிக்​கப்​பட்​டனர். அரசு மற்றும் தனியார் கல்லூரி​களில் மாணவர்​களின் போராட்ட முன்னெடுப்​புகளை கண்காணிக்கும் வகையில் போலீஸார் முன்னெச்​சரிக்​கையாக குவிக்​கப்​பட்​டிருந்​தனர்.

அதேபோல் கொடிசியா மைதானத்தில் 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 15 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்​தப்​பட்​டனர். கோவை அரசு கல்லூரி மற்றும் ரேஸ்கோர்ஸ் நடைபாதை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்​டுள்​ளனர்.

<div class="paragraphs"><p>கோவை காந்திபுரம் டாடாபாத் சாலையில் நேற்று தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.</p></div>

கோவை காந்திபுரம் டாடாபாத் சாலையில் நேற்று தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

கோவை பூ மார்க்கெட் அருகே ஜீவா இல்லத்தில் நேற்று கரப்பான்​பூச்சி ஜனதா கட்சி மற்றும் நீட் எதிர்ப்​பாளர்கள் 3-ம் நாளாக காத்திருப்பு போராட்​டத்தில் ஈடுபட்​டனர். 50-க்கும் மேற்பட்டோர் நாள் முழுவதும் போராட்​டத்தில் பங்கேற்​றனர்.

பல்வேறு அமைப்​பினர் இவர்களின் போராட்​டத்​துக்கு ஆதரவு தெரிவித்​தனர். நீட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் காந்திபுரம் டாடாபாத் சாலையில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.

இதில் பங்கேற்றவர்கள், ‘மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும், நீட் தேர்வால் உயிரிழந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி​ய​வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என வலி​யுறுத்​தினர். இப்​போ​ராட்​டத்​தில் 300-க்​கும்​ மேற்​பட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p>கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் முன்னெச்சரிக்கையாக தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார். | படங்கள்: ஜெ.மனோகரன் |</p></div>
ஜனநாயகனுக்காக முட்டிக் கொண்ட இரு கோஷ்டிகள் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in