“பல்லாவரம் தொகுதியில் சுற்றுப்புறச் சூழலை காப்பதே எனது முதல் பணி” - ஐஜேகே வேட்பாளர் வெங்கடேசன் உறுதி

“பல்லாவரம் தொகுதியில் சுற்றுப்புறச் சூழலை காப்பதே எனது முதல் பணி” - ஐஜேகே வேட்பாளர் வெங்கடேசன் உறுதி
Updated on
1 min read

பல்லாவரம்: பல்​லா​வரம் தொகு​தி​யில் சுற்​றுப்​புற சூழலை பாதுகாப்​பது எனது முதல் பணி என ஐஜேகே வேட்​பாளர் வழக்கறிஞர் வி.வெங்​கடேசன் தெரி​வித்​தார்.

பல்​லா​வரம் சட்​டப்​பேர​வைத் தொகு​தி, அதி​முக கூட்​ட​ணி​யில் ஐஜேகே கட்​சிக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. அக்​கட்​சி​யைச் சார்ந்த வழக்​கறிஞர் வி.வெங்​கடேசன் இரட்டை இலை சின்​னத்​தில் போட்டி​யிடு​கிறார். தான் வெற்றி பெற்​றால் பல்​லா​வரம் தொகுதியை முன்​மா​திரி தொகு​தி​யாக மாற்​று​வதற்கு என்னென்ன நடவடிக்​கைகளை மேற்​கொள்​வேன் என்​பது குறித்து நம்​மிடம் கூறிய​தாவது:

பல்​லா​வரம் தொகு​தி​யில் ஏராள​மான நீர்​நிலைகள் உள்​ளன. அந்த நீர்​நிலைகள் முழு​வதும் மாசடைந்து கழி​வுநீர் குட்​டைகளாக காட்​சி​யளிக்​கின்​றன. இதனால் நிலத்​தடி நீரும், சுற்​றுப்​புற சூழலும் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

ஏரி​களை பாது​காப்​ப​தன் மூலம் நிலத்​தடி நீர் பாது​காக்​கப்​படும். அப்​போது நமக்கு தூய்​மை​யான குடிநீர் கிடைக்​கும். பல்லாவரத்தில் குடிநீரில் கழி​வுநீர் கலந்​த​தால், பலர் தொற்று நோய்​களுக்கு ஆளாகினர். இதைத் தடுத்து சுகா​தா​ர​மான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும்.

பல்​லா​வரம் முதல் குன்​றத்​தூர் வரை சாலை விரி​வாக்​கம் செய்​யப்​படத்​தால் பம்​மல், அனகாபுத்​தூர் மக்​கள் மிக​வும் அவதிப்படுகின்றனர். இச்​சாலை நான்கு வழி சாலை​யாக மாற்ற நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும். திருநீர்​மலை ரங்​க​நாதர் கோயிலில் ரோப் கார் வசதி ஏற்​படுத்​தப்​படும் என அறி​வித்​தும் திமுக அரசு செய்​ய​வில்​லை. நாங்​கள் வந்​தால் ரோப் ​கார் வசதி ஏற்​படுத்​தப்​படும்.

அஸ்​தி​னாபுரம் பகு​தி​யில் குறைந்த மின் அழுத்​தத்தை போக்க துணை மின் நிலை​யம் கொண்​டு​வரப்​படும். பல்​லா​வரம் தொகுதி முழு​வதும் பாகு​பாடு இன்றி சமமான வளர்ச்சி அடைய அனைத்து நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​படும். புதைவட மின் கம்பி பாதை திட்​டம் செயல்​படுத்​தப்​படும், கோயில் நிலங்​களில் ஆயிரக்​கணக்​கான மக்​கள் குடி​யிருக்​கின்​றனர். அவர்​களுக்கு பட்டா வழங்க சட்​டப்​பேர​வை​யில் கவன ஈர்ப்பு தீர்​மானம் கொண்டு வரப்​படும்.

பல்​லா​வரம் தொகு​தி​யில் குறிப்​பாக சுற்​றுச்​சூழல் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. சுவாச தொற்று நோய்​களால் பொது​ மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இவற்றை தடுப்​ப​தற்​காக விழிப்​புணர்​வு​ ஏற்​படுத்தி சுற்​றுச்​சூழலை பாது​காக்க நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும். எனவே பல்​லா​வரம் தொகு​தி​யில் சுற்றுச்சூழலை பாது​காத்​து, முதன்மை தொகு​தி​யாக மாற்ற முயற்சி மேற்​கொள்​வேன். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

“பல்லாவரம் தொகுதியில் சுற்றுப்புறச் சூழலை காப்பதே எனது முதல் பணி” - ஐஜேகே வேட்பாளர் வெங்கடேசன் உறுதி
ஆயிரம் விளக்கு தொகுதியில் அசத்தப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in