ஊரக வளர்ச்சித் துறையில் 3 இணை இயக்குநர்களுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

ஊரக வளர்ச்சித் துறையில் 3 இணை இயக்குநர்களுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: ஊரக வளர்ச்​சித் துறை​யில் 3 இணை இயக்​குநர்​களுக்கு கூடுதல் இயக்​குநராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இது​தொடர்​பாக ஊரக வளர்ச்சி, ஊராட்​சித் துறைச் செயலர் தர்​மேந்​திர பிரதாப் யாதவ் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறியுள்​ள​தாவது:

தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனத்​தில் இணை இயக்​குநர் அந்​தஸ்​தில் மாநிலத் திட்ட மேலா​ளராக (சமூக ஒருங்​கிணைப்பு) பணி​யாற்றி வரும் மா.சிவக்​குமார் பதவி உயர்வு அளிக்​கப்​பட்டு, ஊரக வளர்ச்சி, ஊராட்சி இயக்​ககத்​தில் கூடுதல் இயக்​குநராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இயக்​ககத்​தில் இணை இயக்​குநராக (திட்​டம்) பணிபுரிந்து வரும் கு.செல்​வ​ராசு பதவி உயர்வு பெற்று அதே அலு​வல​கத்​தில் கூடுதல் இயக்​குநராக பணி​யமர்த்​தப்​படு​கிறார்.

தமிழ்​நாடு சமூகத் தணிக்கை தெற்கு மண்​டல இணை இயக்​குநராக பணி​யாற்றி வரும் இரா.மணி பதவி உயர்வு அளிக்​கப்​பட்டு, இயக்​ககத்​தில் கூடுதல் இயக்​குநராக பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளார். பணி நியமனம் வழங்​கப்​பட்ட அலு​வலர்​கள் உடனடி​யாக புதிய பணி​யில் சேர வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்டுள்​ளது.

ஊரக வளர்ச்சித் துறையில் 3 இணை இயக்குநர்களுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
ஆந்திராவில் புயலால் மின்கட்டமைப்புகள் சேதம்: மின்விநியோகத்தை சரிசெய்ய உதவிய தமிழக மின்வாரியப் பணியாளர்கள்

X