

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 2024-ம் ஆண்டு நிலவரப்படி நகர்ப்புற உள்ளாட்சிகளில் 102 செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
தற்போது அது அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 100 உதவி செயற்பொறியாளர்கள் மற்றும்பிற மாநகராட்சிகளில் பணியாற்றும் 16 உதவி செயற்பொறியாளர்களுக்கு, செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை, அரசுக்கு கருத்துரு அனுப்பி இருந்தது.
இதற்கிடையில் உதவி செயற்பொறியாளர்கள் 3 பேர், பதவி உயர்வு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், மேற்கண்ட 116 உதவி செயற்பொறியாளர்களுக்கு தற்காலிகமாக செயற்பொறியாளர் பதவி உயர்வு அளித்து, அவர்களுக்கான பணியிடங்களும் ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.