திமுக தலைவர் ஸ்டாலின் உடன் பேராசிரியர் கலையரசன் சந்திப்பு

திமுக தலைவர் ஸ்டாலின் உடன் பேராசிரியர் கலையரசன் சந்திப்பு
Updated on: 
1 min read

சென்னை: ‘கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல. விமர்சனங்களை உள்வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக் கொள்வதுதான் ஜனநாயகத்தின் மாண்பு’ என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் கலையரசன் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி.

விமர்சனங்களை உள்வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக் கொள்வதுதான் ஜனநாயகத்தின் மாண்பு. விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது கருத்துகளால், காவல் துறை நடவடிக்கைகளால் அல்ல.

ஃபேக் ஐடி-யின் கருத்தை காரணமாகச் சொல்லி, அதிகாலையில் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேராசிரியர் கலையரசன், தமக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி வெளிவந்திருப்பதற்கு எனது வாழ்த்துகள்.

சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளைக் கண்டறிவதோடு, அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம் என்பதை அரசுக்கு நினைவூட்டுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தவெக பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி குறித்து சமூக வலைதள பக்கத்தில் அவதூறான கருத்தை பரப்பியதாக குற்றம்சாட்டி, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் கலையரசனை புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆனால், அந்த சமூக ஊடகக் கணக்கு தன்னுடையது அல்ல என்று கலையரசன் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, அவர் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர், விசாரணை என்ற பெயரில் போலீஸார் தன்னை துன்புறுத்தியதாகவும், ஒரு குற்றவாளியை போல நடத்தியதாகவும் தமிழக டிஜிபிக்கு பேராசிரியர் கலையரசன் புகார் எழுதினார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை பேராசிரியர் கலையரசன் சந்தித்து பேசினார். இந்த நிலையில், பேராசியர் கலையரசன் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் உடன் பேராசிரியர் கலையரசன் சந்திப்பு
முதல்வர் விஜய் நவ.14-ல் அம்பாசமுத்திரம் பயணம்? - சூடுபிடிக்கிறது இடைத்தேர்தல் களம்

X