அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 5.32 லட்சம் சைக்கிள் கொள்முதல்: 150 நாட்களுக்குள் வழங்க உத்தரவு

ஏஐ படம்

ஏஐ படம்

Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் அரசு, அரசு உதவிபெறும் பள்​ளி​களில் பிளஸ் 1 மாணவர்களுக்கு ஆண்​டுதோறும் இல​வச சைக்​கிள்கள் வழங்​கப்​படு​கின்றன.

நடப்பு கல்வி ஆண்​டில் மாணவர்​களுக்கு வழங்க ஹெல்​மெட், தண்​ணீர் பாட்​டில்​களு​டன் ரூ.277 கோடி​யில் 5.32 லட்​சம் நவீன சைக்​கிள்​கள் கொள்​முதல் செய்​யப்​பட உள்​ளன. இதற்​கான டெண்​டரை பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்துறை கடந்த ஆக.28-ம் தேதி வெளி​யிட்​டது.

அதில் ஹீரோ சைக்​கிள்ஸ் நிறு​வனம் டெண்​டர் பெற்​றது. முந்​தைய திமுக ஆட்​சி​யைவிட குறைந்த விலை​யில் மாணவர் சைக்​கிள் ரூ.4,369-க்​கும், மாணவியர் சைக்​கிள் ரூ.4,245-க்​கும் கொள்​முதல் செய்​யப்​பட உள்​ளன. ஹெல்​மெட், தண்​ணீர் பாட்​டிலுடன் சேர்த்து இவை முறையே ரூ.5,260, ரூ.5,130-க்குவாங்​கப்​பட உள்​ளன.

இந்​நிலை​யில் 2.37 லட்​சம் மாணவர் மிதிவண்​டிகள், 2.95 லட்​சம் மாணவியர் சைக்​கிள்​களை ஆணை கிடைத்த 150 நாட்​களுக்​குள் வழங்க வேண்​டும் என்று பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

புத்தகப் பைகளுக்கு டெண்டர்: தமிழகத்​தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்​களுக்கு 2027-28-ம் கல்​வியாண்​டில் இல​வச​மாக வழங்​கு​வதற்​காக 55.93 லட்​சம் புத்​தகப் பைகளை கொள்​முதல் செய்ய தமிழக பாடநூல் கழகம் டெண்​டர் வெளி​யிட்​டுள்​ளது. அதன்படி, புத்தகப் பைகள்சிறிய அளவு, நடுத்​தர அளவு, பெரிய அளவு என 3 வகைகளில் தயாரிக்​கப்​பட வேண்​டும். ஆணை கிடைத்த 120 நாட்​களுக்​குள் புத்​தகப்பைகளை விநியோகிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>ஏஐ படம்</p></div>
உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் மதுரை ஆட்சியர்: அரசிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர்

X