உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் மதுரை ஆட்சியர்: அரசிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர்

அவமதிப்பு நடவடிக்கை கேட்டு மனுத் தாக்கல்
ஆர்.வி.அர்​லேகர், நிஷாந்த் கிருஷ்ணா

ஆர்.வி.அர்​லேகர், நிஷாந்த் கிருஷ்ணா

Updated on: 
3 min read

மதுரை / சென்னை: திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்​றாததற்கு, உச்ச நீதி​மன்​றத்​தில் மதுரை ஆட்சி​யர் மன்​னிப்பு கேட்டு அறிக்கை தாக்​கல் செய்​தார். மேலும், நீதி​மன்ற உத்​தரவை மீறியது குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்டு ஆளுநர் கடிதம் அனுப்பி உள்​ளார்.

மதுரை திருப்​பரங்​குன்​றம் முருகன் கோயில் மலை மீது உள்ள தீபத் தூணில், உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி நேற்​றுமுன்​தினம் தீபம் ஏற்​றப்​பட​வில்லை. இத​னால் முருக பக்​தர்​கள் கடும் கோபம் அடைந்​தனர். உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் இந்த ஆண்​டும் தீபம் ஏற்​றாததால், சாலை மறியலில் ஈடு​பட்​டனர். பல இடங்​களில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இத​னால் போலீ​ஸாருக்​கும் பொது​மக்​களுக்​கும் இடை​யில் தள்​ளு​முள்ளு நடை​பெற்​றது.

இந்​தச் சூழ்​நிலை​யில், 3 நாட்​கள் அவகாசம் இருந்​தும் மதுரை மாவட்ட ஆட்சி​யர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்றே உச்ச நீதி​மன்​றத்​தில் மன்​னிப்பு கேட்டு 17 பக்​கங்​கள் கொண்ட அறிக்​கையைத் தாக்​கல் செய்​தார். அந்த அறிக்​கை​யில் மதுரை மாவட்ட ஆட்சி​யர் கூறி​யிருப்​ப​தாவது: நவம்​பர் 20-ம் தேதி உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்ட பிறகு, வரு​வாய்த் துறை அதி​காரி​களு​டன் முதல் ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தினோம்.

தொடர்ந்து நவம்​பர் 21-ம் தேதி இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர், உச்ச நீதி​மன்ற உத்​தரவைத் தகவல் மற்​றும் மேல் நட​வடிக்​கைக்​காக மாவட்ட ஆட்​சி​யருக்​கும் கோயில் செயல் அலு​வலருக்​கும் அனுப்பி வைத்​தார். அதே நாள் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பல்வேறு துறை அதி​காரி​களு​டன் ஒருங்​கிணைப்​புக் கூட்​டம் நடை​பெற்​றது.

அதில், உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தரவு​கள் விரிவாக விளக்​கப்​பட்டு முடிவு​கள் எடுக்​கப்​பட்​டன. அதன்​படி, நவம்​பர் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் 6.30 மணிக்​குள் தேவஸ்தானத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட 10 நபர்​கள் கொண்ட குழு​வின​ரால் தீபத் தூணில் தீபம் ஏற்​றப்​பட வேண்​டும். வரு​வாய்த் துறை, காவல் துறை, தீயணைப்பு துறை, இந்​தி​யத் தொல்​லியல் துறை ஆகிய​வற்​றில் இருந்து தலா ஒரு பார்​வை​யாளர் நியமிக்​கப்​பட வேண்​டும். கோயில் வழக்​கப்​படி தீபம் ஏற்​றும் முறையைச் செயல் அலு​வலர் முடிவு செய்ய வேண்​டும் என முடிவு செய்​யப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து நவம்​பர் 22-ம் தேதி, கோயில் நிர்​வாக முன்​மொழிவு மற்​றும் பாது​காப்​புத் திட்​டம் மற்​றும் 3-வது ஒருங்​கிணைப்​புக் கூட்​டமும் நடை​பெற்​றன. தேவஸ்தானத்​துக்​கும், இந்து சமய அறநிலை​யத் துறை துணை ஆணை​யர் மற்​றும் செயல் அலு​வலருக்​கும் அனுப்​பப்​பட்ட முதல் கடிதத்​தில், அங்​கீகரிக்​கப்​பட்ட குழு​வின​ரால் மட்​டுமே தீபம் ஏற்​றப்​பட வேண்​டும் என்​ப​தைச் சுட்​டிக்​காட்டி, நீதி​மன்ற உத்​தரவு​களை உடனடி​யாக நிறைவேற்​றுமாறு அறி​வுறுத்​தப்​பட்​டது.

மேலும், பழனியாண்​ட​வர் கோயில் அடிவாரத்​தில் இருந்து மலை உச்சி வரை தற்​காலிக மின் விளக்​கு​கள் அமைத்​தல், நவம்​பர் 24-ம் தேதி காலை 6 மணிக்கு 27 பேர் கொண்ட முன்​னேற்​பாட்​டுக் குழு மலைக்​குச் செல்​லுதல், பிற்​பகல் 2 மணிக்கு 2 கோயில் ஸ்தானீகர்​கள், அறங்​காவலர் குழுத் தலை​வர், கண்​காணிப்​பாளர், தலைமை எழுத்​தர் (திரு​விழாப் பிரிவு), தொழில்​நுட்ப உதவியாளர், பேஷ்​கார், அலு​வலக உதவியாளர் மற்​றும் 2 தீபத் தொழில்​நுட்ப வல்​லுநர்​கள் ஆகிய 10 பேர் கொண்ட குழு செல்​லுதல் என திட்​ட​மிடப்​பட்டது.

‘திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீபம் பாது​காப்​புத் திட்​டம்’ காவல் துறை​யால் சமர்ப்​பிக்​கப்​பட்​டது. அதன்​படி மொத்​தம் 5,797 காவலர்​கள் பணி​யமர்த்​தப்​பட்​டனர். இதையடுத்து, நவம்​பர் 23-ம் தேதி​யன்று 3-வது கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது, காவல்துறையினர் மற்​றும் திரு​மங்​கலம் வரு​வாய் கோட்​டாட்​சி​யர் ஆகியோர் அளித்த அறிக்​கை​யின் அடிப்​படை​யில், நவம்​பர் 23-ம் தேதி இரவு 9 மணி முதல் நவம்​பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை கூட்​டங்​கள், போராட்​டங்​கள், ஆர்ப்​பாட்​டங்​கள், ஊர்​வலங்​கள் நடத்​தவும், எந்​தவொரு நபரும் திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ஏறவும் மதுரை மாவட்​டத்​தில் பிஎன்​எஸ்எஸ் பிரிவு 163-ன் கீழ் தடை உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது.

நவம்​பர் 24-ம் தேதி, கார்த்​திகை திரு​விழா நாள் நிகழ்​வு​கள் குறித்து காலை 9.30 முதல் 12.30 வரை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ஆலோ​சனை நடத்தி, காவல் ஆணை​யருடன் இணைந்து திருப்​பரங்​குன்​றம் மலை​யில் நேரில் ஆய்வு செய்​யப்​பட்​டது. காலை 11.30 மணிக்​குத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 10 நபர்​களுக்​குத் தேவஸ்தான அறங்​காவலர் குழு​வின் ஒப்​புதல் கோரப்​பட்​டுள்​ள​தாகவும், ஒப்​புதல் கிடைத்த பின்​னரே முன்​னேற்​பாட்​டுப் பணிகளும் தீபம் ஏற்​றும் பணி​யும் மேற்​கொள்​ளப்​படும் என்​றும் அறநிலை​யத்​துறை செயல் அலு​வலர் தரப்​பில் கடிதங்​கள் மூலம் தெரி​விக்​கப்​பட்​டது.

பிற்​பகல் 3.47 மணி​யளவில், தேவஸ்தான அங்​கீகாரம் இன்​னும் வராததால், அங்​கீகரிக்​கப்​பட்ட நபர்​களின் பெயர் பட்​டியலுடன் கூடிய ஒப்​புதலை உடனடி​யாக வழங்​குமாறு இந்து சமய அறநிலைய துறைக்கு நினைவூட்​டல் கடிதம் அனுப்​பப்​பட்​டது. மாலை 5.03 மணிக்கு அனைத்து ஏற்​பாடுகளும் தயாராக இருப்​ப​தாகவும், எவ்​வித நிர்​வாகத் தடைகளும் இன்றி உடனடி​யாக அங்​கீகரிக்​கப்​பட்ட குழு​வுடன் சென்று தீபத்​தூணில் தீபம் ஏற்​றுமாறும் ஒருங்​கிணைப்பு அதி​காரி என்ற முறை​யில் ஆட்சி​யர் மின்​னஞ்​சல் அனுப்​பினார்.

ஆனால், நிர்​ணயிக்​கப்​பட்ட நேரத்​தில் தேவஸ்தானத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட எந்​தக் குழு​வும் தீபம் ஏற்ற வர​வில்லை. நேர நீட்​டிப்​பும் கோரப்​பட​வில்லை. இந்​நிலை​யில், இரவு 7.32 மணிக்கு கோயி​லின் செய்​திக்​குறிப்பு வெளியானது. இது​குறித்து தொடர்பு கொண்ட போது, அறங்​காவலர் குழு​வின் தீர்​மானத்​தால் தன்​னால் முன்​னேற இயல​வில்லை என அறநிலை​யத் துறை செயல் அலு​வலர் தெரி​வித்​தார்.

இரவு 8.30 மணிக்​குச் செயல் அலு​வலர் அளித்த அறிக்​கை​யில், “கோயில் அறங்​காவலர் குழு​வின் தீர்​மானப்​படி வழக்​க​மாக ஏற்​றப்​படும் இடத்​திலேயே தீபம் ஏற்ற முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அதன்​படி மாலை 6 மணிக்கு உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் அருகே உள்ள தீப மண்​டபத்​தில் மகா தீபம் ஏற்​றப்​பட்​டது. தீபத்​தூணில் தீபம் ஏற்​றப்​பட​வில்லை” என்று குறிப்​பிடப்​பட்​டது.

தேவஸ்தானம் அங்​கீகரிக்​கும் நபர்​களுக்​குப் பதிலாக வேறு யாரை​யும் அங்​கீகரிக்​கும் அதி​காரம் மாவட்ட ஆட்​சி​யருக்கு இல்லை. தேவஸ்தானம் தீப தூணில் தீபம் ஏற்​று​வதற்​கான குழுவை அமைத்து பரிந்​துரைக்​காததால், உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி தீபத் தூணில் தீபம் ஏற்ற முடிய​வில்லை.

திருப்​பரங்​குன்​றம் அருள்​மிகு சுப்​பிரமணிய சுவாமி கோயில் பழமையான வழிபாட்​டுத் தலம். இதன் சடங்​கு​கள் தலைமுறைகளாகப் பின்​பற்​றப்​படும் மத மரபு​கள் மற்​றும் ஆகம விதி​களின்​படியே நடத்​தப்​படு​கின்​றன.

எனவே, தொன்​றுதொட்​டுப் பின்​பற்​றப்​படும் வழக்​கப்​படி, கார்த்​திகை மகா தீபம் மூல​வரின் தலைக்கு நேர் மேலே மலை​யில் உள்ள உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் அருகே உள்ள தீப மண்​டபத்​தில் தீபம் ஏற்​றப்​படு​கிறது. இத்​தகைய மரபு​கள் கோயி​லின் தனித்​து​வ​மான மத அடை​யாளமாகும். ஆகமச் சான்​றுகள் அடிப்​படை​யில், இந்த மரபு​களைப் பாது​காக்​கும் வகை​யில் இந்த ஆண்​டும் வழக்​க​மான இடத்​திலேயே தீபம் ஏற்​று​வது என்று கோயில் அறங்​காவலர் குழு​ தீர்​மானித்​தது.

ஆனால், தேவஸ்தானத்​தின் அங்​கீகாரத்​தையும் தீபத்​தூணில் தீபம் ஏற்​று​வதையும் உறுதி செய்ய மாவட்ட ஆட்சி​யர் என்ற முறை​யில் அனைத்து முயற்​சிகளை​யும் எடுத்த போதிலும், அறங்​காவலர் குழு வழக்​க​மான இடத்​தில் தீபம் ஏற்​றத் தீர்​மானித்​ததால் தீபத் தூணில் தீபம் ஏற்ற முடி​யாமல் போனது. அதற்​காக மாவட்ட ஆட்சி​யர் என்ற முறை​யில் வருத்​தம் தெரி​வித்து மன்​னிப்​புக் கோரு​கிறேன். இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் மாவட்ட ஆட்சி​யர் தெரி​வித்​துள்​ளார்.

இந்​நிலை​யில், உச்ச நீதி​மன்ற உத்​தரவை மதிக்​காமல், தீபத் தூணில் தீபம் ஏற்​றாமல் விட்​டதற்​காக உச்ச நீதி​மன்​றமே தாமாக முன்​வந்து நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்கை நடத்த வேண்​டும் என்று நேற்று கோரிக்கை வைக்​கப்​பட்​டது. ஆனால், நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்கு தாக்​கல் செய்​தால், அதை விசா​ரணைக்​குப் பரிசீலிப்​போம் என்று உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். இதையடுத்து, இந்து அமைப்​பு​கள் சார்​பில் நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்கு தொடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தச் சூழ்​நிலை​யில், உச்ச நீதி​மன்ற உத்​தரவை மீறியது தொடர்​பாக அறிக்கை அளிக்க ஆளுநர் ஆர்.வி.அர்​லேகரும் தமிழக அரசைக் கேட்​டுக் கொண்​டுள்​ள​தாகத் தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.

தமிழக ஆளுநர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதா என்பது குறித்து சட்டப்பிரிவு 167 - ன் கீழ் முழுமையான அறிக்கை அளிக்க வேண்டும். விதிமீறல் இருப்பின் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அடிப்படையான அரசு உத்தரவு, போலீஸாரின் அறிவுறுத்தல் குறித்தும் தெரிவிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்​பாக இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்வரா சி.சுப்​பிரமணி​யம் தலை​மையி​லான நிர்​வாகி​கள், ஆளுநர் ஆர்.வி.அர்​லேகரை நேற்று நேரில் சந்​தித்து மனு அளித்​தனர். அதில், “திருப்​பரங்​குன்​றம் மலை தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​று​வதற்​கான உத்​தரவை நடைமுறைப்​படுத்​தத் தவறிய மதுரை மாவட்ட ஆட்சி​யர் மற்​றும் தமிழக அரசு மீது நட​வடிக்கை எடுக்க வேண்​டும்” என்று வலியுறுத்​தப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>ஆர்.வி.அர்​லேகர்,&nbsp;நிஷாந்த் கிருஷ்ணா</p></div>
திருப்பரங்குன்றம் தீபத்தூண் அரசியலில் சிக்கவைக்கப்பட்ட மதுரை ஆட்சியர்

X