மாநகராட்சிகளின் பாதாள சாக்கடை திட்டங்களில் தனியார் பங்களிப்பு: மதுரை, நாகர்கோவிலில் சாத்தியக்​கூறுகளை ஆய்வு செய்ய டெண்டர் வெளியீடு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் நகராட்சி நிர்​வாகத் துறை​யின்​கீழ் சென்​னை, மதுரை உட்பட 25 மாநக​ராட்​சிகள் செயல்​படு​கின்​றன. இதற்​கிடையே மாநக​ராட்​சிகளின் செயல்​பாடு​களில் தனி​யார் பங்​களிப்​பானது அதி​கரித்​து ​வருகிறது.

அந்​தவரிசை​யில் முதல்​முறை​யாக பாதாளச் சாக்​கடை திட்​டங்​களை தனி​யார் பங்​களிப்​புடன் மேற்​கொள்ள நகராட்சி நிர்​வாகத்​துறை முடிவு செய்​துள்​ளது.

முதல்​கட்​ட​மாக மதுரை, நாகர்​கோ​வில் ஆகிய மாநக​ராட்​சிகளில் இத்​திட்​டத்தை அமல்​படு​வத்​து​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்​கல் செய்ய, தமிழ்​நாடு நகர்ப்​புற உள்​கட்​டமைப்பு நிதிச் சேவை​கள் நிறு​வனம் டெண்​டர் வெளி​யிட்​டுள்​ளது.

அதில், இந்த மாநக​ராட்​சிகளில் பாதாள சாக்​கடை பணி​களை மேற்​கொள்ள ஏற்​கெனவே கொள்​முதல் மற்​றும் கட்​டு​மானம் (இபிசி) முறை​யில் திட்ட அறிக்கை தயார் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதன்​படி மதுரை மாநக​ராட்​சி​யில் கழி​வுநீர் கட்​டமைப்​பு​களை சீரமைத்​தல், புதி​தாக இணைக்​கப்​பட்ட பகு​தி​களில் கழி​வுநீர் சேகரிப்பு அமைப்​பு​களை ஏற்​படுத்​துதல், கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள் உள்​ளிட்ட பணி​கள் திட்​டத்​தில் இடம் ​பெற்​றுள்​ளன.

இதன்​ம​திப்பு ரூ.2,377 கோடி​யாகும். அதே​போல், நாகர்​கோ​வில் மாநக​ராட்​சி​யில் பாதாள சாக்​கடை வசதி​யற்ற பகு​தி​களில், 111 கி.மீ நீளத்​

துக்கு கழி​வுநீர் குழாய்​கள், 19.93 கி.மீ நீளத்​துக்கு கழி​வுநீர் உந்​துக் குழாய்​கள், தேவை​யான உந்​து​நிலை​யங்​கள் உள்​ளிட்ட பணி​கள் ரூ.189 கோடி​யில் மேற்​கொள்​ளப்பட உள்​ளன.

இதையடுத்து தேர்வு செய்​யப்​படும் ஆலோ​சனை நிறு​வன அறிக்​கையை 5 மாதங்​களுக்​குள் சமர்​ப்பிக்க வேண்​டும். முதல் 2 மாதங்​களில் திட்​டத்​தின் சாத்​தி​யக்​கூறு அறிக்கை மற்​றும் திட்​டக் கட்​டமைப்பு தயாரிக்​கப்பட வேண்​டும்.

அடுத்த 3 மாதங்​களில் தனி​யார் நிறு​வனத்தை தேர்வு செய்​வதற்​கான டெண்​டர் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். இந்த டெண்​டரில் பங்​கேற்​கும் நிறு​வனங்​கள் ரூ.50,000 முன்​வைப்​புத் தொகை செலுத்த வேண்​டும்.

விண்​ணப்​பங்​களை அக்​டோபர் 15-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. திட்​டம் நடை​முறைக்கு வந்​தால், அதன் பராமரிப்பு, வரி வசூல் உள்​ளிட்ட பணி​களி​லும் தனி​யார்​ நிறு​வனத்​தின்​ பங்​களிப்​பு இருக்​கும்​ என எதிர்பார்க்கப்படுகிறது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர் கொலை: தடுக்க வந்த தாயையும் வெட்டி தப்பிய கும்பல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in