தனியார் பேருந்து உரிமையாளர் போராட்டம் தள்ளிவைப்பு

தனியார் பேருந்து உரிமையாளர் போராட்டம் தள்ளிவைப்பு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்துக்கு ‘வெற்றிப் பயணம்’ என்று பெயரிட்டுள்ளது. இத்திட்டத்தை அக்.2-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

இந்தத் திட்டத்தால் பாதிக் கப்படுவதாகவும் இலவச பேருந்து பயண திட்டத்தைத் தனியார் பேருந்துகளிலும் அமல்படுத்தி அதற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்க வேண்டும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளத்தினர் வலியுறுத்தினர்.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து செப்.29-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 30-ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி வரை பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தங்கராஜ் கூறும்போது, “எங்கள் கோரிக்கைகளை வரு வாய்த் துறை அமைச்சரும் போக்குவரத்துத் துறை அமைச்சரும் பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதன் காரணமாக வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப் படுகிறது” என்று நேற்று தெரிவித்தார்.

தனியார் பேருந்து உரிமையாளர் போராட்டம் தள்ளிவைப்பு
தாராபுரத்தில் விஜய் மெழுகுச் சிலையுடன் வாக்கு சேகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in