தமிழகத்தில் பாடப் புத்தகங்கள் அச்சிட முன்னுரிமை: பாடநூல் கழக தலைவர் தகவல்

லயோலா மணி

லயோலா மணி

Updated on
1 min read

வேலூர்: வேலூர் மாவட்​டம், காட்​பாடி​யில் உள்ள தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வி​யியல் பணி​கள் கழக கிடங்கை தமிழ்​நாடு பாடநூல் கழக தலை​வர் லயோலா மணி நேற்று ஆய்வு செய்​தார்.

பின்​னர், அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் உள்ள பாடநூல் கழக கிடங்​கு​களை ஆய்வு செய்து வரு​கிறேன். சில இடங்​களில் பாடப் புத்​தகங்​கள் தட்​டுப்​பாடு உள்​ள​தாக கூறப்பட்டது. அரசு பள்​ளி​களில், மாணவர்சேர்க்கை அதி​கரித்​த​தால், சில குறை​கள் இருந்​தன. அவை சரிசெய்​யப்​பட்டு விட்​டன. கடந்த ஆட்​சிகளில், பாடப்​புத்​தங்​கள் ஆந்​தி​ரா​வில் அச்​சிடப்​பட்​டன.

பாடப்​புத்​தங்​களை சிவ​காசி​யில் அச்​சிடு​வதற்கு முன்​னுரிமை வழங்​கப்​படு​மா? என்​பது குறித்து கலந்​தாய்வு நடந்து வரு​கிறது. தமிழகத்​தில் உள்​ளவர்​களுக்கு முன்​னுரிமை என்​ப​தில் முதல்​வர் விஜய் உறு​தி​யாக உள்​ளார். அதனால், தமிழக அச்​சகங்​களில் புத்​தகங்​கள் அச்​சிட அனைத்து வாய்ப்​பு​களும் உள்​ளன. கோவை மாணவர் கொலை தொடர்​பாக விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. சட்​டம் தன் கடமையை செய்​யும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

<div class="paragraphs"><p>லயோலா மணி</p></div>
சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு: மாநகராட்சி நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in