குடியரசு தலைவர் டிச.17-ல் வேலூர் வருகை: ஸ்ரீபுரம் தங்கக்கோயில் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

குடியரசு தலைவர் டிச.17-ல் வேலூர் வருகை: ஸ்ரீபுரம் தங்கக்கோயில் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
Updated on
1 min read

வேலூர்: வேலூர் ஸ்ரீபுரம் தங்​கக் கோயிலுக்​குக் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வரு​வதையொட்​டி, சுற்​று​வட்​டாரப் பகு​தி​கள் சிவப்பு மண்​டல​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. மேலும், இப்​பகு​தி​களில் ட்ரோன், சிவில் விமானங்​கள் பறக்க தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

வேலூர் மாவட்​டம் அரியூர் அடுத்த ஸ்ரீபுரத்​தில் ஸ்ரீநா​ராயணி பீடம் தங்​கக்​கோ​யில் உள்​ளது. வெளி மாவட்​டங்​கள் மற்​றும் வெளி மாநிலங்​களில் இருந்து தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் இங்கு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வரும் 17-ம் தேதி காலை 11 மணிக்கு திருப்​ப​தியி​லிருந்து ஹெலி​காப்​டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரத்​துக்கு வரு​கிறார். தொடர்ந்​து, தங்​கக்​கோயி​லில் உள்ள ஸ்ரீநாராயணி அம்​மன், 1,800 கிலோ எடை கொண்ட வெள்ளி விநாயகர், சொர்​ணலட்​சுமி, பெரு​மாளை தரிசனம் செய்​வதுடன், ஸ்ரீசக்தி அம்​மா​விடம் ஆசி பெறுகிறார்.

தியான மண்டபம் திறப்பு: பின்​னர், தங்​கக்​கோ​யில் அருகே ஸ்ரீநா​ராயணி ஆயுர்​வேத மருத்​து​வ​மனை வளாகத்​தில் ரூ.5 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள தியான மண்​டபத்தை திறந்​து​வைக்​கிறார். பகல் 12.30 மணி​யள​வில் மீண்​டும் ஹெலி​காப்​டர் மூலம் திருப்​ப​திக்​குப் புறப்​பட்​டுச் செல்​கிறார்.

குடியரசுத் தலை​வருடன், ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் ஆகியோர் வரு​கின்​றனர். குடியரசுத் தலை​வர் வேலூருக்கு வரு​வதையொட்டி மாவட்​டம் முழு​வதும் வரும் 17-ம் தேதி ட்ரோன்​கள் பறக்​கத் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக ஆட்​சி​யர் வி.ஆர்.சுப்புலட்சுமி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஸ்ரீபுரம் தங்​கக்​கோ​யிலுக்கு வரு​வதையொட்​டி, தங்​கக்​கோ​யில், அதைச் சுற்​றி​யுள்ள பகு​தி​கள் சிவப்பு மண்​டல​மாக அறிவிக்​கப்​படு​கின்றன.

எனவே, வரும் 17-ம் தேதி வேலூர் மாவட்​டத்​தில் எந்த காரணத்துக்காகவும் ட்ரோன்​கள் மற்​றும் சிவில் விமானங்​கள் பறக்க தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது” என்று தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் டிச.17-ல் வேலூர் வருகை: ஸ்ரீபுரம் தங்கக்கோயில் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்க தீர்மானத்தை தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும்: 154 வழக்கறிஞர்கள் கடிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in