திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திருத்தணியில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கையில் வெள்ளி வேலை ஏந்தி பிரச்சாரத்தை தொடங்கினார்.

தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திருத்தணியில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கையில் வெள்ளி வேலை ஏந்தி பிரச்சாரத்தை தொடங்கினார்.

Updated on
2 min read

திருத்​தணி: தேமுதிக வேட்​பாளர்​களை ஆதரித்து நேற்று திருத்தணியில் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில், திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் தேமு​திக சார்​பில், விருத்​தாசலம், விருதுநகர், பல்​லா​வரம் உள்​ளிட்ட 10 சட்​டப்​பேரவை தொகு​தி​களில், அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், இளைஞரணி செய​லா​ளர் விஜயபிர​பாகரன் உள்​ளிட்ட 10 பேர் போட்​டி​யிடு​கின்​றனர்.

இந்த வேட்​பாளர்​களை ஆதரித்​து, தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் திருத்​தணி​யில் தேர்​தல் பிரச்​சா​ரத்தை ஏப். 1-ம் தேதி தொடங்​கு​வ​தாக, அக்​கட்​சி​யின் தலைமை நேற்று முன் தினம் அறி​வித்​தது.

அதன்​படி, தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்​கு​வதற்​காக நேற்று திருத்​தணிக்கு வருகை தந்த பிரேமலதா விஜய​காந்த்​தை, தேமு​திக, திமுக உள்​ளிட்ட மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணிக் கட்சி நிர்​வாகி​கள் வரவேற்​றனர்.

அப்​போது, திருத்​தணி தொகு​தி​யின் தேமு​திக வேட்​பாளர் கிருஷ்ண​மூர்த்​தி, பிரேமலதா விஜய​காந்தை வரவேற்​று, வெள்​ளியி​லான வேலை நினைவு பரி​சாக வழங்​கி​னார். அந்த வேலுடன் திருத்​தணி சுப்​பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்ற பிரேமலதா விஜய​காந்த், வெள்ளி வேலை சுப்​பிரமணிய சுவாமி​யின் பாதங்​களில் வைத்​து, சுவாமி தரிசனம் செய்​தார்.

தொடர்ந்​து, பிரேமலதா விஜய​காந்த், திருத்​தணி கமலா திரையரங்​கம் அருகே தேமு​திக வேட்​பாளர்​களை ஆதரித்​து, வெள்ளி வேலை கையில் ஏந்தி தன் பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார்.

இந்த பிரச்​சா​ரத்​தில் திருத்​தணி தொகு​தி​யின் தேமு​திக வேட்​பாளர் கிருஷ்ண​மூர்த்​தியை ஆதரித்து பிரேமலதா விஜய​காந்த் பேசி​ய​தாவது: தமிழக சட்​டப்​பேரவை 2011 தேர்​தலில் திருத்​தணி தொகு​தி​யில் முரசு வென்​றது. அந்த வரலாறு 2026-ல் திரும்​பும். திருத்​தணி தொகு​தி​யில் தேமு​திக வெற்றி பெற்று வரும்​போது, இத்​தொகு​தியை எல்லா வகை​யிலும் முன்​னேற்​று​வோம்.

திமுக தேர்​தல் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்ள வாக்​குறு​தி​கள் அனைத்​தை​யும் திமுக கூட்​டணி வெற்றி பெற்ற உடன் செய்​வோம். திருத்​தணி தொகுதி மக்​கள், திருத்​தணி சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் செவ்​வாய்க் கிழமை​களில் சிறப்பு வழிகளில் தரிசனம் செய்ய ஏற்​பாடு செய்​யப்​படும்.

திருத்​தணி சுப்​பிரமணிய சுவாமி கோயிலுக்கு மாற்​றுப்​பாதை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்​கப்​படும். திருத்​தணி​யில் புதிய பூங்​காக்​கள் மற்​றும் அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி அமைக்​கப்​படும். திருத்​தணி தொகு​தி​யில், மகளிர் உரிமை தொகை விடு​பட்​ட​வர்​களுக்கு கிடைக்​க​வும், விடு​பட்ட பகுதி நேர ரேஷன் கடைகளை விரை​வில் திறக்​க​வும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

திருத்​தணி தொகு​தி​யில் இளைஞர்​களுக்கு வேலை வாய்ப்பு வழங்க பன்​னாட்டு நிறு​வனங்​கள் அமைக்​கப்​படும்; திருத்​தணி கூட்​டுறவு சர்க்​கரை ஆலை நவீன​மாக்​கப்​படும். நெல்​கொள்​முதல் நிலை​யங்​கள் அதி​கரிக்​கப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்​வில், திமுக​வின் திரு​வள்​ளூர் மேற்கு மாவட்ட செய​லா​ளர் சந்​திரன், தலைமை செயற்​குழு உறுப்​பினர் பூபதி உள்​ளிட்ட திமுக, தேமு​திக உள்​ளிட்ட மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணிக் கட்சி நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் என திரளானோர் பங்​கேற்​றனர்.

தொடர்ந்​து, பிரேமலதா விஜய​காந்த், திருத்​தணி தொகு​திக்கு உட்​பட்ட கே.ஜி.கண்​டிகை, பொதட்​டூர்​பேட்​டை, பள்​ளிப்​பட்​டு, ஆர்​.கே.பேட்டை உள்​ளிட்ட பகு​தி​களில் தன் தேர்​தல் பிரச்​சா​ரத்தை மேற்​கொண்​டார்.

<div class="paragraphs"><p>தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திருத்தணியில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கையில் வெள்ளி வேலை ஏந்தி பிரச்சாரத்தை தொடங்கினார்.</p></div>
மாநகர காவல் ஆணையர், துணை ஆணையருக்கு நிர்வாக நீதிபதிக்கான அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு தடை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in