“அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது மக்களின் சுமையை அதிகரிக்கும்” - பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

Updated on: 
1 min read

சென்னை: “மின் உற்பத்தித் திட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து, மின்கட்டணத்தை உயர்த்துவதும், மின்வெட்டுக்கு வழிவகுப்பதும், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதும் மக்களின் சுமையை மேலும் அதிகரிக்கும்” என்று தேமுதிக பொதுச் செயலாலர் பிரேமலதா விஜயகாந்த கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த காலங்களில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.13-க்கு கொள்முதல் செய்த நிலையில், மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தைத் தனியாரிடம் இருந்து ரூ.35-க்கு கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

தமிழகம் எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்ற கேள்வியை இன்று மக்கள் எழுப்பி வருகின்றனர்.

ஒருபுறம் மின்வெட்டு, மறுபுறம் மின்கட்டண உயர்வு என மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற அதிக விலைக்கு வாங்குவது எந்த வகையில் நியாயமானது? இதற்குத் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

ஏற்கெனவே மின்சாரத் துறை கடன் சுமையில் இருக்கும் நிலையில், தமிழகம் சுமார் ரூ.10 லட்சம் கோடி கடனில் இருப்பதாகக் கூறப்படும் சூழலில், தனியாரிடம் தொடர்ந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதன் மூலம் மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்துவது எதற்காக?

இந்தக் கொள்முதல் நடவடிக்கையின் அவசியம், விலை நிர்ணயம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.

தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்களை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். மின் உற்பத்தித் திட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து, மின்கட்டணத்தை உயர்த்துவதும், மின்வெட்டுக்கு வழிவகுப்பதும், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதும் மக்களின் சுமையை மேலும் அதிகரிக்கும்.

மக்களின் வரிப் பணத்தையும், மாநிலத்தின் நிதிநிலையையும் கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்தியைப் பெருக்கி, நியாயமான விலையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதே அரசின் கடமையாகும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

<div class="paragraphs"><p>பிரேமலதா விஜயகாந்த்</p></div>
விலைவாசி உயர்வு முதல் மின்சார பிரச்சினை வரை: தவெக அரசு மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in