மழையில் நெல் நனைவதை தடுக்க பிரேமலதா கோரிக்கை

மழையில் நெல் நனைவதை தடுக்க பிரேமலதா கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: ​திறந்​தவெளி​யில் வைக்​கப்​பட்​டுள்ள நெல்லை பாது​காப்​பான கிடங்​கு​களுக்கு மாற்றுமாறு தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா கோரிக்கை விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கும்​பகோணம், தஞ்​சாவூர், கடலூர், மயி​லாடு​துறை, திரு​வாரூர் உள்​ளிட்ட பகு​தி​களில் விவ​சா​யிகளிடம் இருந்து அரசு நேரடி​யாக நெல் கொள்​முதல் செய்​யாத​தால், அறு​வடை செய்​யப்​பட்ட நெல் சாலை​யோரத்தி​லும், திறந்​த வெளி​யிலும் குவித்து வைக்​கப்​பட்​டுள்​ளது.

மழைக்​காலம் தொடங்​கி​யுள்ள நிலை​யில், மழையில் நனைந்​து நெல் வீணாகும் அபா​யம் ஏற்​பட்​டுள்ளது.

எனவே, விவ​சாயிகளிடம் உள்ள நெல்லை அரசு உடனே நேரடி கொள்முதல் செய்ய வேண்​டும். திறந்​த வெளி​யில் உள்ள நெல்லை பாது​காப்​பான கிடங்​கு​களுக்கு மாற்ற வேண்​டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மழையில் நெல் நனைவதை தடுக்க பிரேமலதா கோரிக்கை
டெண்டர் முறைகேடு புகார்: கே.என்.நேருவிடம் விரைவில் விசாரணை - லஞ்ச ஒழிப்பு போலீஸார் முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in