“எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதைக் கலாசாரம்” - ஸ்டாலின் முன்பு பிரேமலதா பேசியதால் திமுகவினர் அதிர்ச்சி

“எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதைக் கலாசாரம்” - ஸ்டாலின் முன்பு பிரேமலதா பேசியதால் திமுகவினர் அதிர்ச்சி
Updated on
2 min read

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான் சொல்​கிறேன். எங்கு பார்த்​தா​லும் பாலியல் வன்​கொடுமை, போதை கலா​சா​ரம் இருக்​கிறது” என முதல்வர் ஸ்டாலின் முன்பு தேமுதிக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா பேசியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலத்​தில் திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்​து, சேலம் கோட்டை மைதானத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் கலந்து கொண்ட பிரச்​சார பொதுக்​கூட்​டம் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்​றது. இதில், தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா பேசி​ய​தாவது: இன்று தான் முதல்​வர் ஸ்டா​லினுடன் நடைப​யிற்​சி​யில் நானும் நடந்​தேன். இதில் முதல்​வர் ஸ்டா​லின் பெண்​களுக்கு அளிக்​கும் மரி​யாதை​யும், பாது​காப்​பை​யும் நான் நடந்து செல்​லும் போது நேரில் பார்த்து உணர்ந்​தேன்.

மதச்​சார்​பற்ற கூட்​டணி இந்த தேர்​தலில் 234 தொகு​தி​களி​லும் வெற்றி பெற்​று, எதிர்க்​கட்சி என்ற நிலையே இல்​லாத அளவுக்கு சாதனை படைக்​கும். இந்த தேர்​தலில் ஒட்​டுமொத்த தாய்க்​குலங்​களின் வாக்​கு​கள் திமுக கூட்​ட​ணிக்கு கிடைக்​கும்.

திமுக தலை​வர் ஸ்டா​லின் பல்​வேறு கட்​சிகளை​யும் கூட்​ட​ணி​யில் பொறுமை காத்து அவர்​களுக்கு தேவை​யான மரி​யாதையை கொடுத்​து, ஒரு கூட்டு குடும்​ப​மாய் இத்​தேர்​தலில் பாது​காத்து உள்​ளார். ஆனால், அதி​முக-வை விட்டு ஓபிஎஸ், செங்​கோட்​டையன் உள்​ளிட்​ட​வர்​களும், தேமு​திக உள்​ளிட்ட கட்​சிகளும் வெளி​யேறி உள்​ளனர். இதன் மூலம் தலைமை பண்​பும், மாண்​பும் அதி​முக -விடம் இல்லை என்​பது தெளி​வாகிறது.

தொகுதி மறுசீரமைப்பு தமி​ழ​கத்தை வஞ்​சிக்​கும் செய​லாக உள்​ளது. சம உரிமை வழங்க வேண்​டும் என்​பதே நமது நிலைப்​பாடு. தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான் சொல்​கிறேன். எங்கு பார்த்​தா​லும் பாலியல் வன்​கொடுமை, போதை கலா​சா​ரம் இருக்​கிறது.

இதைத் தவிர வேறென்ன சொல்ல முடி​யும்? வேறெது​வும் இந்த ஆட்​சிக்கு எதி​ராகச் சொல்ல முடி​யாது. நான் சொல்​கிறேன், அப்​படி ஏதாவது ஒரு பெண்​ணுக்கு பிரச்​சினை என்​றால் நான் அண்​ணனிடம் உரிமையோடு எடுத்​துச் சொல்​வேன். நிச்​ச​யம் பெண்​களுக்கு பாது​காப்​பான நிலையை அண்​ணன் உரு​வாக்​கு​வார் என்​ப​தில் யாருக்​கும் மாற்​றுத் கருத்​துத் தேவை​யில்​லை.

சினிமா காட்சி போல கையை அசைத்​தால் வாக்கு வங்கி வந்​து​விடும் என்​ப​தல்ல அரசி​யல். லாலி​பாப் சாப்​பிடும் சின்​னப் பையன் அரசி​யலில் கதா​நாயக​னாக மாறி​விட முடி​யாது. 75 ஆண்டு காலம் அரசி​யலில் நிலைத்து நிற்​கும் திமுக, மக்​களுக்​கான சேவையை நன்கு உணர்ந்து செய​லாற்றி வரு​கிறது. மக்​களோடு மக்​களாக நின்று அரசி​யல் செய்​வது​தான் தலை​மைக்​கான பண்​பு.

எனவே, மீண்​டும் தமிழக முதல்​வர் ஸ்டா​லின் இரண்​டாவது முறை​யாக தமி​ழ​கத்​தில் ஆட்​சிப் பொறுப்பை ஏற்​பார். திமுக மற்​றும் கூட்​டணி கட்​சிகளுக்கு பெரு​வாரி​யான வாக்​கு​களை அளித்து நாளை நமதே என்​பதை நிரூபிப்​போம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

“எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதைக் கலாசாரம்” - ஸ்டாலின் முன்பு பிரேமலதா பேசியதால் திமுகவினர் அதிர்ச்சி
“தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது” - குஷ்பு ஆருடம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in