சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி: தொண்டர்களுடன் ஆலோசித்த பிறகு முடிவு - பிரேமலதா அறிவிப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நேற்று இரவு நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ், இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன். (அடுத்த படம்) கூட்டத்தில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர். | படங்கள்: எம்.சாம்ராஜ் |

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நேற்று இரவு நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ், இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன். (அடுத்த படம்) கூட்டத்தில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர். | படங்கள்: எம்.சாம்ராஜ் |

Updated on
1 min read

விருத்தாசலம்: தேமு​திக சார்​பில் ‘மக்​கள் உரிமை மீட்பு மாநாடு’ கடலுர் மாவட்​டம் வேப்​பூர் அடுத்த பாசார் கிராமத்​தில் நேற்று நடை​பெற்​றது. தலைமை நிலை​யச் செய​லா​ளர் பார்த்​த​சா​ரதி மாநாட்​டுத் தீர்​மானங்​களை வாசித்​தார்.

பின்​னர், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் பேசி​ய​தாவது: இந்த மாநாட்​டில் இயற்​றப்​பட்​டத் தீர்​மானங்​கள் முக்​கிய​மானவை. விஜய​காந்​தின் எண்​ணங்​களைப் பிர​திபலிக்​கும் வகை​யில் தீர்​மானங்​கள் இயற்​றப்​பட்​டுள்​ளன.

இந்த நாள் வரலாற்று முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நாள். இதனால் முக்​கிய முடிவு​கள் குறித்த எதிர்​பார்ப்​புடன் தொண்​டர்​கள் வந்​துள்​ளனர். சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கூட்​ட​ணிக்​காக, நான் பேரம் பேசுவ​தாக கடந்த சில மாதங்​களாக தொலைக்​காட்​சிகளி​லும், சமூக வலை​தளங்​களி​லும் விமர்​சனங்​கள் முன்​வைக்​கப்​பட்​டன. நாங்​கள் கட்சி நிர்​வாகி​களிட​மும், தொண்​டர்​களிட​மும் இதுகுறித்து பேசுகிறோம்.

அதை யார் கேள்வி கேட்​பது? யாருடன் கூட்​டணி வைப்​பது என்​பது தொடர்​பாக கட்​சிக்​காரர்​களிடம் பேசுவேன். அவர்​கள் யாரை சுட்​டிக் காட்​டு​கிறார்​களோ, அவர்​களிடம் பேசுவோம்.

தேமு​தி​கவைப் பற்றி ஏளன​மாகவோ, தரக்​குறை​வாகவோ எவரேனும் பேசி​னால், தொண்​டர்​கள் தக்க பதிலடி கொடுப்​பார்​கள். கூட்​டணி தொடர்​பாக மாவட்​டச் செய​லா​ளர்​களு​டன் தலை​மைக் கழகத்​தில் ஆலோ​சனை நடத்​தி, அவர்​களின் கருத்​துகளைக் கேட்​டறிந்​தோம்.

தற்​போதைக்கு எந்​தக் கட்​சி​யுட​னும் கூட்​டணி வைப்​பது குறித்து முடிவு செய்ய வேண்​டாம் என்​பதே அவர்​களின் கருத்​தாக இருந்​தது. எதற்​காக இதைக் கூறுகிறேன் என்​றால், இது​வரை நாம் சத்​ரிய​னாக இருந்​து​விட்​டோம், இனி சாணக்​கி​யத்​தன​மாக இருக்க வேண்​டும்.

ஆளுங்​கட்​சி​யோ, எதிர்க்​கட்​சியோ அல்​லது மத்​தி​யில் உள்ள கட்​சிகளோ கூட்​டணி குறித்து அறிவிக்​காத​போது, நாம் மட்​டும் ஏன் முந்​திரிக்​கொட்​டை​போல முந்​திக் கொள்ள வேண்​டும்.

தேமு​திக இல்​லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடி​யாது. தைபிறந்​தால் வழி பிறக்​கும். எனவே, நமக்கு இன்​னும் நேரம் இருக்​கிறது. தெளி​வாகச் சிந்​தித்​து, தொண்​டர்​களு​டன் ஆலோ​சித்து, தேமு​திக தொண்​டர்​களை மதிப்​பவர்​களு​டன் கூட்​டணி வைக்​கப்​படும்.

உரிய ஆலோ​சனைக்​குப் பின்​னர் கூட்​டணி குறித்து முடி​வெடுக்​கப்​படும். இவ்​வாறு பிரேமலதா பேசி​னார். கூட்​டத்​தில், தேமு​திக பொரு

ளாளர் சுதீஷ், இளைஞரணிச் செய​லா​ளர் விஜய பிர​பாகரன் மற்​றும் நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் கலந்துகொண்​டனர்​.

<div class="paragraphs"><p>கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நேற்று இரவு நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ், இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன். (அடுத்த படம்) கூட்டத்தில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர். | <em><strong>படங்கள்: எம்.சாம்ராஜ்</strong></em> |</p></div>
இனியன் சம்பத் சென்னையில் காலமானார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in