இனியன் சம்பத் சென்னையில் காலமானார்

இனியன் சம்பத் சென்னையில் காலமானார்
Updated on
1 min read

சென்னை: தமிழ்​நாடு காங்​கிரஸ் முன்னாள் தலை​வர் ஈவி​கேஎஸ்​.இளங்​கோவனின் சகோ​தரர் இனியன் சம்பத் (72) நேற்று கால​மா​னார். தமிழ்​நாடு இளைஞர் காங்​கிரஸ் தலை​வர் பதவி வகித்​துள்ள இனியன் சம்பத், பெரி​யாரின் கொள்​கை​களில் பற்று கொண்​டிருந்​தார்.

புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்​டு, சிகிச்சை பெற்று வந்த நிலை​யில், சென்னை திரு​வான்​மியூரில் உள்ள அவரது இல்​லத்​தில் நேற்று கால​மா​னார். இவரது மனைவி டெய்சி ராணி. இவர்​களுக்கு குழந்​தைகள் இல்​லை.

இனியன் சம்பத் உடலுக்கு திக தலை​வர் கி.வீரமணி, தமிழ்​நாடு காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் சு.​திரு​நாவுக்​கரசர் உள்​ளிட்​டோர் அஞ்​சலி செலுத்​தினர். அவரது உடல் நேற்று மாலை பெசன்ட் நகர் மயானத்​தில் தகனம் செய்யப்பட்டது.

தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை வெளி​யிட்ட இரங்​கல் அறிக்​கை​யில், “இனியன் சம்பத் மறைந்த செய்​தி​யறிந்து மிகுந்த அதிர்ச்​சி​யும், துயர​மும் அடைந்​தேன்.

அவரது மறை​வால் வாடும் குடும்​பத்​தினருக்​கும், நண்​பர்​களுக்​கும் ஆழ்ந்த இரங்​கலை​யும், அனு​தாபத்​தை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்" என்று தெரி​வித்​துள்​ளார்​.

இனியன் சம்பத் சென்னையில் காலமானார்
சென்னையில் ஜன. 17, 18-ல் நடைபெறும் கல்வெட்டியல் பயிலரங்கில் பங்கேற்க அழைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in