மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சி.வி.சண்முகம் 07.05.2026 அன்று தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு ஜூன், 2026-இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சார்ந்த பிரவீன் சக்கரவர்த்தி முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், தான் ஏற்கெனவே வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தமிழகத்தில் அந்த ஒரு இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பிரதிநிதித்துவ அடிப்படையில் அதிக எம்எல்ஏக்களைக் கொண்ட தவெகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு மாநிலங்களவை எம்.பி. இடத்தை ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்தார். இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
என் இனிய தமிழ் மக்களே... உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in