மேகேதாட்டுக்கு எதிரான தீர்மானத்தில் நடுவர் மன்றம் கோரியதை நியாயப்படுத்துகிறார் உதயநிதி: பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

பி.ஆர்.பாண்டியன்

பி.ஆர்.பாண்டியன்

Updated on: 
1 min read

சென்னை: ‘மேகே​தாட்​டுக்கு எதி​ரான சட்​டப்​பேரவை தீர்​மானத்தின்​போது, நடு​வர் மன்​றம் கோரியதை எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி நியாயப்​படுத்​து​வது கண்​டனத்​துக்​குரியது’ என்று தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்க பொதுச்​செய​லா​ளர் பி.ஆர்​.​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: காவிரி நடு​வர் மன்ற இறு​தித் தீர்ப்பு அரசிதழில் வெளி​யிட்ட பிறகு, 1956-ன் மாநில நீர் தாவா சட்​டம் இனி பொருந்​தாது. ஏற்​கெனவே மன்​னர் காலத்​தில் போடப்​பட்ட ஒப்​பந்​தங்​களும் பொருந்​தாது என்​பதை நடு​வர் மன்ற இறு​தித் தீர்ப்பு தெளி​வாக கூறி​யுள்​ளது. உச்ச நீதி​மன்​ற​மும் அதை ஏற்றுக்கொண்டு மத்​திய அரசிதழில் வெளி​யிடப்​பட்டு செயல்பாட்டில் உள்ள நிலை​யில், திமுக தன்​னிச்​சை​யாக நடு​வர் மன்​றம் கோர எடுத்த முடிவை நியாயப்​படுத்த முயற்​சிப்​பதை வன்​மை​யாகக் கண்​டிக்​கி​றோம்.

காவிரி குறித்து எந்த ஒரு நடவடிக்கை மேற்​கொள்ள வேண்டுமானாலும் அனைத்து கட்சி விவ​சா​யிகள் அமைப்பை கூட்டி முடிவு எடுக்​கப்பட வேண்​டும், அல்​லது சட்​டமன்ற கூட்டத்தில் முடி​வெடுக்​கப்பட வேண்​டும். ஆனால் எந்த கூட்​ட​மும் நடத்​தப்​ப​டா​மல், கலந்து பேசாமல் தன் விருப்​பத்​துக்கு திமுக அரசு, சட்​டத்​துக்கு புறம்​பாக கடந்த மார்ச் மாதம் கடிதம் எழுதி உள்​ளது.

அதை, சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசு கொண்​டு​வந்த மேகே​தாட்டு அணைக்கு எதி​ரான தீர்மானத்தில் இடைச் செரு​கலாக சட்​டத்​துக்கு புறம்​பாக, காவிரி நடு​வர் மன்ற இறுதி தீர்ப்​புக்கு முரணாக மேகே​தாட்​டுக்கு நடு​வர் மன்​றம் கோரும் தீர்​மானத்தை நிறை​வேற்​றி​விட்​டு, அதை நியாயப்​படுத்த உதயநிதி விரும்​புவதன் நோக்​கம் என்ன? இதுகுறித்து தமிழக மக்​களுக்கு திமுக விளக்​கமளிக்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>பி.ஆர்.பாண்டியன்</p></div>
இளைஞர்களைக் கண்டு பாஜக அரசு பயப்படுகிறது: கார்த்தி சிதம்பரம் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in