இளைஞர்களைக் கண்டு பாஜக அரசு பயப்படுகிறது: கார்த்தி சிதம்பரம் கருத்து

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

Updated on: 
1 min read

சென்னை: “இளைஞர்​களைக் கண்டு மத்​திய பாஜக அரசு பயப்படு​கிறது” என சிவகங்கை காங்​கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரி​வித்​தார்.

இதுகுறித்து அவர் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: இளைஞர்​களைக் கண்டு மத்​திய பாஜக அரசு பயப்படு​கிறது. இந்​தி​யா​வின் இளைஞர்​களின் கூர்​மை​யான கேள்வி​களுக்கு அவர்​களால் பதிலளிக்க முடிய​வில்​லை. தற்​போதைய சூழ்​நிலை, வாய்ப்​பு​கள் இல்​லாதது, குறிப்​பாகத் தேர்வு முறை​யில் இப்​போதும் நில​வும் அநீதி மற்​றும் இந்த அரசின் தன்னிச்​சை​யான போக்கு ஆகிய​வற்​றால் இளைஞர்​கள் மிகுந்த ஏமாற்​றமடைந்​துள்​ளனர்.

இந்த விவ​காரத்​தில் எதிர்க்​கட்​சிகள் நிலை​மையை மதிப்​பிட்டு அதற்​கேற்ப தகுந்த நடவடிக்​கை​களை எடுப்​போம். இந்த விவகாரத்​தில் இண்​டியா கூட்​ட​ணி​யின் தலை​வர்​கள் அனை​வ​ரும் மீண்​டும் கூடி உரிய நடவடிக்​கை​களை எடுப்​பார்​கள். தேர்​தல் ஆணை​யத்​தின் எஸ்​ஐஆர் நடை​முறைப்​படுத்​துதல் மற்​றும் அதன் வடிவ​மைப்​பு, குறிப்​பாக 6 மற்​றும் 7 படிவங்​கள் குறித்த விவ​காரங்​களை வெளிச்​சம் போட்​டுக் காட்ட இண்​டியா கூட்​டணி அனைத்து அமைப்​பு​களை​யும் சந்​திக்க திட்​ட​மிட்​டுள்​ளது. இவ்வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>கார்த்தி சிதம்பரம்</p></div>
தமிழகத்தில் பாஜகவால் கொண்டு வரப்பட்டவர்தான் விஜய்: பரந்தாமன் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in