தேர்​தல் காரண​மாக சென்னையில் ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்கக் ​கோரிய வழக்கு தள்ளுபடி

தேர்​தல் காரண​மாக சென்னையில் ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்கக் ​கோரிய வழக்கு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: தேர்​தல் காரண​மாக சென்​னை​யில் ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளை தள்ளி வைக்​கக்​கோரி தொடரப்​பட்ட வழக்கு வாபஸ் பெறப்​பட்​ட​தால் அதை தள்​ளு​படி செய்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக உயர் நீதி​மன்​றத்​தில் சேப்​பாக்​கம்- திரு​வல்​லிக்​கேணி தொகுதி வேட்​பாள​ரான டி.பிர​பாகரன் ஏற்​கெனவே தாக்கல் செய்​திருந்த மனு​வில், “தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரும் ஏப்​.23 அன்று நடை​பெறவுள்​ளது. சேப்​பாக்​கம்- திருவல்​லிக்​கேணி தொகு​தி​யில்​தான் சேப்​பாக்​கம் கிரிக்​கெட் மைதானம் அமைந்​துள்​ளது.

தற்​போது ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகள் நடை​பெற்று வரும் நிலை​யில் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி​ பங்​கேற்​கும் கிரிக்​கெட் போட்​டிகள் சேப்​பாக்​கம் மைதானத்​தில் ஏப்.3 மற்​றும் ஏப்​.11 ஆகிய தேதி​களில் நடை​பெறவுள்​ளது. தேர்​தல் நேரத்​தில் கிரிக்கெட் போட்​டிகள் நடை​பெறு​வ​தால் சட்​டம்- ஒழுங்​கைப் பராமரிப்​ப​தி​லும், போக்​கு​வரத்தை சீரமைப்​ப​தி​லும் போலீஸாருக்கு சிக்​கல் ஏற்​படும்.

குறிப்​பாக கிரிக்​கெட் ரசிகர்​கள் என்ற பெயரில் அரசி​யல் கட்சியினர் மைதானத்​துக்​குள் பிரச்​சா​ரம் செய்ய முற்​பட்டு பிரச்சினை ஏற்​பட்​டால் வீரர்​கள் மற்​றும் கிரிக்​கெட் ரசிகர்களுக்கான பாது​காப்பை உறுதி செய்​வ​தி​லும் சிக்​கல் ஏற்படும். எனவே இந்த கிரிக்​கெட் போட்​டிகளை தேர்​தல் முடிந்த பிறகு நடத்​தும் வகை​யில் தள்​ளிவைக்க உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​ முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், “ஏற்​கெனவே ஒரு போட்டி அமை​தி​யான முறை​யில் முடிந்​து​விட்​டது. அதில் எந்த விதி​மீறல்​களும் இல்​லை. அடுத்த போட்​டியை​யும் முடிந்​தால் கண்டு ரசி​யுங்​கள். வெறும் ஊகத்​தின் அடிப்​படை​யில் தொடரப்​பட்​டுள்ள வழக்கை ஏற்க முடியாது” என்​றனர்.

அதையடுத்து மனுவை வாபஸ் பெறு​வ​தாக மனு​தா​ரர் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டதையடுத்​து, அதற்கு அனு​ம​தி​யளித்த நீதிப​தி​கள், வழக்​கைத் தள்​ளு​படி செய்​து உத்தரவிட்டுள்ளனர்.

தேர்​தல் காரண​மாக சென்னையில் ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்கக் ​கோரிய வழக்கு தள்ளுபடி
உள்​நாட்​டு, சர்​வ​தேச விமான கட்டணங்கள் உயர்வு; முன்​ப​திவு செய்திருந்தால் கட்டண உயர்வு பொருந்​தாது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in