மின்வாரிய கேங்மேன்கள், களப்பணி ஊழியர்களுக்கு தபால் வாக்கு: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: மின்​வாரிய கேங்​மேன்​கள், களப்​பணி ஊழியர்​களுக்கு தபால் வாக்கு வழங்க வேண்​டும் என, தமிழ்​நாடு மின் ஊழியர் மத்​திய அமைப்பு வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இது குறித்​து, அமைப்​பின் பொதுச்​செய​லா​ளர் ஜெய்​சங்​கர் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்​டி, தமிழக அரசின் அறி​விப்​பின்​ படி, மின்​வாரிய பணி​யாளர்​களுக்கு பொது விடு​முறை நாளாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

வாக்​களிக்​கும் உரிமை மறுப்பு

இந்த பணி​யாளர்​கள் அனை​வருமே சொந்த ஊரை விட்டு 200, 300, 500 கி.மீட்​டர் தொலை​வில் பல்​வேறு மின்​வட்​டங்​களில் பணிபுரிந்து வரு​கின்​றனர்.

2024-ம் ஆண்டு நடை​பெற்ற நாடாளு​மன்ற தேர்​தலின் போது கேங்​மேன் பணி​யாளர்​களுக்கு சிறப்பு பணி என்ற பெயரில் நாடாளு​மன்ற தேர்​தல் நாளன்று ஒவ்​வொரு பிரிவு அலு​வலர்​களும் பணி செய்​திட நிர்​பந்​தம் செய்​த​தால், கேங்​மேன் பணி​யாளர்​கள் அனை​வருக்​கும் வாக்​களிக்​கும் உரிமை மறுக்​கப்​பட்​டது.

மேலும், 2024-ம் ஆண்டு செய்த தவறை வரும் 23-ம் தேதி அன்று நடை​பெற உள்ள சட்​டப்​பேரவை தேர்​தல் நாளன்​றும், கேங்​மேன் பணி​யாளர்​கள் பணி செய்ய பிரிவு அலு​வலர்​களால் நிர்​பந்​தம் செய்​யப்​பட்​டு, பணி ஒதுக்​கீடு பட்​டியல் தயார் செய்​யப்​படு​வ​தாக தெரிய வரு​கிறது.

விடு​முறை வழங்க வேண்டும்

அனைத்து மின்​விநி​யோக வட்​டங்​களில் பணிபுரி​யும் கேங்​மேன் பணி​யாளர்​கள் உள்​ளிட்ட ஒரு சில களப்​பிரிவு ஊழியர்​கள் அனை​வருக்​கும் வரும் 23-ம் தேதி நடை​பெற உள்ள தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் வாக்​களித்​திடும் வகை​யில், தபால் வாக்கு செலுத்த உரிய ஏற்​பாடு செய்ய வேண்​டும். அல்​லது விடு​முறை வழங்க பிரிவு அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்த வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தமிழகத்​தில் இந்த முறை திமுக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்: பியூஸ் கோயல் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in