ஆண்டிப்பட்டியில் எழுத்தாளர் பூமணி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

ஆண்டிப்பட்டியில் எழுத்தாளர் பூமணி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
Updated on
1 min read

கோவில்பட்டி: ​சாகித்ய விருது பெற்ற கரிசல் எழுத்​தாளர் பூமணி​யின் உடல், கோவில்​பட்டி அருகே ஆண்​டிப்​பட்​டி​யில் அரசு மரி​யாதை​யுடன் அடக்​கம் செய்​யப்​பட்​டது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்​தாளர் பூமணி கடந்த 12-ம் தேதி சென்​னை​யில் உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார். அவருக்கு வயது 79. கரிசல் இலக்​கி​யத்​தின் தலைமை செயல​க​மாக விளங்​கும் கோவில்​பட்டி மண்​ணில் பிறந்த பூமணி, இலக்​கி​யத்​தின் மீது ஆர்​வம் கொண்​ட​வர். இவர் எழு​திய வெக்​கை, பிறகு, வாய்க்​கால் வரப்​பு​கள், அஞ்ஞாடி போன்ற நாவல்​கள் புகழ்பெற்​றவை. பல்​வேறு சிறுகதைகளை​யும் எழு​தி​யுள்​ளார்.

இவரது ‘அஞ்​ஞாடி’ நாவலுக்​காக 2014-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்​கப்​பட்​டது. பூமணி எழு​திய வெக்கை நாவல் 1982-ல் வெளி​யானது. இந்த நாவல்​தான் இயக்​குநர் வெற்​றி​மாறன் இயக்​கத்​தில் ‘அசுரன்’ திரைப்​பட​மாக வெளி​யானது குறிப்​பிடத்​தக்​கது.

எழுத்​தாளர் பூமணி​யின் உடல் நேற்று முன்​தினம் ஆம்​புலன்ஸ் மூலம் கோவில்​பட்டி பாரதி நகரில் உள்ள அவரது வீட்​டுக்கு கொண்டு வரப்​பட்டு பொது​மக்​கள் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டது. நேற்று காலை தூத்​துக்​குடி வடக்கு மாவட்ட திமுக செய​லா​ளரும் முன்னாள் அமைச்சருமான பி.கீ​தாஜீவன், சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் ஜீ.​வி.​மார்க்​கண்​டேயன், கா.கருணாநி​தி, திரைப்பட இயக்​குநர் மாரி செல்​வ​ராஜ் மற்​றும் ஏராள​மான எழுத்​தாளர்​கள், பொது​மக்​கள் அஞ்​சலி செலுத்​தினர்.

பிற்​பகல் 2 மணிக்கு அவரது உடல் சொந்த ஊரான கோவில்​பட்டி அருகே ஆண்​டிப்​பட்​டிக்கு எடுத்​துச் செல்​லப்​பட்​டது. அங்கு பூமணிக்கு சொந்​த​மான நிலத்​தில் இறுதி நிகழ்ச்​சிகள் நடந்​தன. அரசு சார்​பில் குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் துறை அமைச்​சர் பெ.மதன்​ராஜா, மாவட்ட ஆட்​சி​யர் விஷூ மகாஜன், சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் கா.கருணாநி​தி, ரெட்​டி​யார்​பட்டி நாராயணன் (நாங்​குநேரி) ஆகியோர் அஞ்​சலி செலுத்​தினர்.

தொடர்ந்து எழுத்​தாளர் பூமணி​யின் உடலுக்கு அரசு சார்​பில், தூத்​துக்​குடி மாவட்ட ஆயுதப்​படை காவல் சிறப்பு உதவி ஆய்​வாளர் சரவணன் தலை​மையி​லான 10 காவலர்​கள், வானத்தை நோக்கி 3 சுற்​றுக்​களாக 30 குண்​டு​கள் முழங்கச் செய்​து, அரசு மரி​யாதை செலுத்​தினர். தொடர்ந்து அவரது உடல் அடக்​கம் செய்​யப்​பட்​டது. இதில், தவெக மாவட்ட செய​லா​ளர் பாலசுப்​பிரமணி​யன், அதி​முக அமைப்​புச் செய​லா​ளர் சின்​னத்​துரை மற்​றும் எழுத்​தாளர்​கள், கவிஞர்​கள், கிராம மக்​கள் கலந்து கொண்​டனர்.

ஆண்டிப்பட்டியில் எழுத்தாளர் பூமணி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
“புதிய மொழி கற்பது வீணாகாது” - சிபிஎஸ்இ-யின் மும்மொழிக் கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in