பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சக்கரபாணி, டி.ஆர்.பாலு எம்.பி., தலைமைச் செயலர் முருகானந்தம்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சக்கரபாணி, டி.ஆர்.பாலு எம்.பி., தலைமைச் செயலர் முருகானந்தம்.

Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் 2.23 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.3,000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில், 2.23 கோடி அரிசிகுடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்புடன் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.77 கோடி வேட்டிகள், 1.78 கோடி சேலைகள் வழங்க அரசால் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை பட்ரோடு நியாயவிலைக் கடையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, ரூ.3,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், வேட்டி, சேலைகளையும் வழங்கி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், இ.கருணாநிதி, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) மு.வீரப்பன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நேற்றே தொடங்கியது. அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் திட்டத்தை தொடங்கி வைத்தனர். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பரிசு, வேட்டி - சேலைஆகியவை ரூ.7,604.29 கோடி செலவில் வழங்கப்படுகிறது.

நியாயவிலைக் கடைகளில் கூட்டம் சேர்வதை தவிர்க்கும் விதமாக, டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள், நேரத்தில் சென்று பரிசுத் தொகுப்பை மக்கள் பெற்றுக் கொள்ளலாம். அரிசி பெறும்அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கலுக்கு முன்னதாக பொங்கல் பரிசுத் தொகுப்பு, வேட்டி - சேலை வழங்க கூட்டுறவு,உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

<div class="paragraphs"><p>பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சக்கரபாணி, டி.ஆர்.பாலு எம்.பி., தலைமைச் செயலர் முருகானந்தம்.</p></div>
“விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்காக பொங்கும் காங்கிரஸ்...” - தமிழிசை பதிலடி கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in