பொங்கல் விடுமுறைக்காக முன்பதிவு: முக்கிய ரயில்களில் 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்

பொங்கல் விடுமுறைக்காக முன்பதிவு: முக்கிய ரயில்களில் 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்
Updated on: 
1 min read

சென்னை: பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு பெரும்​பாலான விரைவு ரயில்​களில் முன்பதிவு டிக்​கெட்கள் 5 நிமிடங்​களி​லேயே விற்று தீர்ந்​தன.

அடுத்த ஆண்டு ஜன.15-ம் தேதி (வெள்​ளிக்​கிழமை) பொங்​கல் பண்​டிகை கொண்​டாடப்​பட உள்​ளது. ஜன.14-ம் தேதி போகி பண்​டிகை, 16-ம் தேதி மாட்​டுப்​பொங்​கல், 17-ம் தேதி காணும் பொங்​கல் ஆகிய பண்​டிகைகளும் அடுத்தடுத்து வரவுள்​ளன. இந்த பண்​டிகையை முன்​னிட்டு, சென்னை உள்​பட பெருநகரங்​களில் இருந்து சொந்த ஊர்​களுக்கு ரயில்​களில் செல்ல வசதி​யாக, 60 நாட்​கள் முன்​னதாகவே டிக்கெட் முன்​ப​திவு செய்யலாம்.

அதன்​படி, ஜன.13-ம் தேதி ஊருக்கு புறப்​பட டிக்​கெட் முன்​ப​திவு நேற்று காலை 8 மணிக்கு ஐஆர்​சிடி.சி இணை​யதளம் வழி​யாகவும், முன்​ப​திவு மையங்​கள் மூலமாகவும் முன்​ப​திவு விறு​விறுப்​பாக நடை​பெற்​றது. சென்​னை​யில் இருந்து தென் மாவட்​டங்​களுக்கு புறப்​படும் பெரும்​பாலான ரயில்​களில் 5 முதல் 10 நிமிடங்​களில் டிக்​கெட் முன்​ப​திவு முடிந்து, காத்​திருப்​போர் பட்​டியலுக்கு வந்​தது.

குறிப்​பாக மதுரை, திருநெல்​வேலி, செங்​கோட்டை, கன்​னியாகுமரி, தூத்​துக்​குடி ஆகிய ஊர்​களுக்கு புறப்​படும் பாண்​டியன், நெல்லை, பொதிகை, முத்​துநகர் விரைவு ரயில்களின் இரண்​டாம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளில் பயணிக்க முன்​ப​திவு 3 முதல் 5 நிமிடங்​களுக்​குள் முடிந்​தது.

இதுபோல, சென்னை சென்ட்​ரலில் இருந்து கோயம்​புத்​தூருக்கு புறப்​படும் நீல​கிரி, சேரன் ஆகிய விரைவு ரயில்​களிலும் முன்​ப​திவு முடிந்து, “ரெக்ரெட்” என காட்​டியது. அதே நேரத்​தில், பகல் நேர ரயில்களில் இருக்​கைகள் இருந்​தன. முன்​ப​திவு மையங்​களில் பொது​மக்​கள் நீண்​டநேரம் வரிசையில் காத்​திருந்​தனர் மேலும் ஜன.15ம் தேதிக்கு சிறப்பு ரயில்​களை அறி​விக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

பொங்கல் விடுமுறைக்காக முன்பதிவு: முக்கிய ரயில்களில் 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்
தமிழக அரசு நிதி ரூ.22 கோடியை மோசடி செய்த 7 பேர் கைது: 24 வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றியது அம்பலம்

X