தமிழகத்தில் தொடரும் காவல் மரணங்கள்: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

தமிழகத்தில் தொடரும் காவல் மரணங்கள்: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: ​தூத்​துக்​குடி​யில் காவல்​துறை விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட இளைஞர் உயி​ரிழந்த நிலை​யில், தமிழகத்​தில் காவல் மரணங்​கள் தொடர் கதை​யாகி வரு​வ​தாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​:

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநி​தி: தூத்​துக்​குடி​யில் விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட இளைஞர் அருணாச்​சலம், காவலர்​களின் தாக்​குதலுக்கு ஆளாகி உயி​ரிழந்​திருப்​பது வேதனையளிக்​கிறது.

போலீ​ஸார் தனக்கு இழைத்த அநீ​தியை தனது இறுதி நிமிடங்​களில் அருணாச்​சலமே எடுத்து சொன்​னதைப் பார்க்​கும்​போது நெஞ்​சம் கலங்​கு​கிறது. காவல்​துறைக்கு பொறுப்பு வகிக்​கும் முதல்​வர், கடும் நடவடிக்​கைகளை எடுக்​காமல் மவுனம் காப்​ப​தால், இத்​தகைய சம்​பவங்​கள் தொடர்​கின்​றன.

திமுக துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி: நாகர்​கோ​விலைத் தொடர்ந்து தூத்​துக்​குடி​யிலும் காவல்​துறை​யின் சித்​ர​வதைக்கு உள்​ளாகி இளைஞர் ஒரு​வர் உயி​ரிழந்​திருக்​கும் செய்தி வேதனையளிக்​கிறது.

காவல்​துறைக்கு பொறுப்பு வகிக்​கும் முதல்​வர் உட்பட பல அமைச்​சர்​களும், அதி​காரி​களும் திரைப்​படம் பார்க்க விடுப்​பில் சென்​றுள்​ள​தால், தமிழகத்​தில் ‘அரசு’ என்ற ஒன்று உள்​ள​தா? என்​பதே சந்​தேகம்​தான்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: தூத்​துக்​குடி​யில் இளைஞர் அருணாச்​சலம் விசா​ரணைக்கு அழைத்து செல்​லப்​பட்டு உயி​ரிழந்​துள்ள சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​துகிறது. தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்​திலேயே காவல் மரணங்​கள் தொடர்​கதை​யாக மாறி​விட்​டன.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரிகள், சட்டத்தை தன் கையில் எடுத்து காவல் மரணங்களை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்? முதல்வர் இவ்விவகாரத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாமக தலை​வர் அன்புமணி: ஏற்​கெனவே நாகர்​கோ​வில் சிறை​யில் விசா​ரணைக் கைதி சிறைத்​துறை​யின​ரால் தாக்கி கொல்​லப்​பட்​ட​தாக எழுந்த குற்​றச்​சாட்​டு​களின் பதற்​றம் தீரும் முன்பே இன்​னொரு விசா​ரணை கைதி மர்​ம​மான முறை​யில் உயி​ரிழந்​திருப்​பது அதிர்ச்​சி​யும், வேதனை​யும் அளிக்​கிறது. இந்த உயி​ரிழப்பு குறித்து சிபிஐ விசா​ரணைக்கு அரசு ஆணை​யிட வேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தமிழக காவல்​துறை​யின் காவலில் நடை​பெறும் இத்​தகைய உயி​ரிழப்​பு​கள் அப்​பட்​ட​மான மனித உரிமை மீறலாகும். தூத்​துக்​குடி​யில் நடை​பெற்​றிருக்​கும் காவல் மரண வழக்கை விரி​வாக விசா​ரித்​து, தொடர்​புடையவர்கள் மீதும் கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் காவலில் அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்திருப்பது கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதல் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஐஜேகே தலை​வர் ரவி பச்​ச​முத்​து: காவல்​துறை​யின் செயல்​பாடுகள் பொது​மக்​களிடையே மிகுந்த அச்​சத்​தை​யும் அதிர்ச்​சி​யை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளன.

மநீம துணைத்தலைவர் ஆர்.தங்கவேலு: காவல் விசாரணை மரணங்களில் தமிழக அரசின் தொடர் அலட்சிய போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

தமிழகத்தில் தொடரும் காவல் மரணங்கள்: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
நீட் தனது வாக்குறுதியில் தோற்றுவிட்டது: மு.க.ஸ்டாலின் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in