717 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: தமிழக அரசின் உத்தரவுக்கு கட்சிகள் வரவேற்பு

717 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: தமிழக அரசின் உத்தரவுக்கு கட்சிகள் வரவேற்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் 717 மதுக்​கடைகளை மூட முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளதை அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வரவேற்​றுள்​ளனர். இதுகுறித்து அவர்​கள் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது:

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்டியன்: டாஸ்மாக் மது​பானக் கடைகளை, 2 வார காலத்​துக்​குள் மூட உத்​தர​விடப்​பட்​டுள்​ளதை வரவேற்​கிறோம்.

மேலும், மூடப்​படும் டாஸ்​மாக் கடைகளில் கடந்த 23 ஆண்​டு​களாக பணிபுரிந்து வரும் சுமார் 3,500 டாஸ்​மாக் பணி​யாளர்​களின் வேலை வாய்ப்​பை​யும், அவர்​களது குடும்​பங்​கள் வாழ்​வா​தா​ரத்​தை​யும் உறுதி செய்ய வேண்​டும்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்முகம்: டாஸ்​மாக் கடைகளுக்​கு, இணை​யாக எப்​.எல்.2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்​றங்​கள் என்ற பெயரில் தனி​யார் மதுக்​கடைகளும் இயங்கி வரு​கின்​றன. இந்த தனி​யார் மதுக் கடைகள் அரசு அறி​வித்​துள்ள மூடப்​படும் கடைகள் பட்​டியலில் இடம் பெற​வில்​லை.

பாமக நிறு​வனர் ராம​தாஸ்: டாஸ்​மாக் கடைகளை மூட உத்​தர​விட்​டுள்ள முதல்​வர் விஜய்க்கு பாராட்​டு​கள். இது​போல் தமிழகம் முழு​வதும் செயல்​படும் டாஸ்​மாக் கடைகளுக்​கு, திறந்து இருக்​கும் நேரத்தை குறைத்து நிர்​ண​யம் செய்ய வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: தமிழகத்​தின் மூலை முடுக்​கு​கள் வரை பரவி​யுள்ள மது வணி​கக் கட்​டமைப்பை தகர்க்க இந்த நடவடிக்கை மட்​டும் போது​மானதல்ல. டாஸ்​மாக் கடைகளை கடந்து தமிழகம் முழு​வதும் சந்​துக்​கடைகள், மனமகிழ் மன்​றங்​கள் செயல்​பட்டு வருகின்றன.

இவற்​றை​யும் மூட வேண்​டும். அதே​போல், மதுக்​கடைகள் இல்​லாத பகு​தி​களில் கள்​ளச்​சா​ரா​யம் தலை​தூக்​கு​வதற்கு அனு​ம​திக்​கக் கூடாது.

மநீம தலை​வர் கமல்​ஹாசன்: மது​பானம் விற்​பனை ஓர் அரசாங்​கத்​தின் பணி​யாக என்​றுமே இருக்​கக்​கூ​டாது. 717 மதுக்​கடைகள் மூடல் என்ற நடவடிக்​கையை தொடங்​கி​யிருக்​கும் அரசு, இந்த எண்​ணிக்​கையை அதி​கப்​படுத்த வேண்​டும்.

பாஜக விவ​சாய அணி மாநில தலை​வர் ஜி.கே.​நாக​ராஜ்: தமிழக அரசின் உத்​தரவு வரவேற்​கத்​தக்​கது. மேலும், முதல்​வர் உடனடி​யாக மருத்​து​வக்​குழு அமைத்து தமிழகம் முழு​வதும் மது​வால் ஏற்​படும் தீமை​ குறித்து ஆய்வு செய்​து, அதை வெள்​ளை​யறிக்​கை​யாக வெளி​யிட்டு அரசின் மது​விற்​பனையை மடை​மாற்​றம் செய்ய நல்​ல தீர்வு காண வேண்​டும்.

தமிழக வாழ்​வுரிமை கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன்: அனைத்து மதுக்​கடைகளை​யும் மூடி, தமிழகத்தை மது இல்​லாத மாநில​மாக்க உத்​தர​விட வேண்​டும்.

இது​போல், எஸ்​டிபிஐ மாநில தலை​வர் முகம்​மது மு​பாரக், இந்​திய தேசிய லீக் மாநில தலை​வர் நாகூர் ராஜா உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல்​ கட்​சி தலை​வர்களும் வரவேற்றுள்ளனர்.

717 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: தமிழக அரசின் உத்தரவுக்கு கட்சிகள் வரவேற்பு
எந்தக் கட்சிக்கும் சார்பில்லாமல் செயல்படுவேன்: சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in