தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு சட்டப்பேரவையில் அரசியல் கட்சிகளின் ஆதரவு - எதிர்ப்பு - நடுநிலை நிலைப்பாடு

தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு சட்டப்பேரவையில் அரசியல் கட்சிகளின் ஆதரவு - எதிர்ப்பு - நடுநிலை நிலைப்பாடு
Updated on
2 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய்​கொண்டு வந்த நம்​பிக்கை தீர்​மானத்​தின் மீதான விவாதத்​தின்​போது ஆதரித்​தும், எதிர்த்​தும், நடுநிலை நிலைப்​பாட்டுடனும் பல்​வேறு கட்சிகளின் பிர​தி​நி​தி​கள் பேசினர். அதன் விவரம் வரு​மாறு:

காங்​கிரஸ் உறுப்​பினர் ராஜேஷ்கு​மார்: இந்​திய அரசி​யல் சாசனத்​தை​யும், மதச்​சார்​பின்​மை​யை​யும், சமூகநீ​தி​யை​யும் பாது​காக்​கும் பொறுப்​புணர்​வோடு காங்​கிரஸ் கட்சி தவெக அரசுக்கு தனது ஆதரவை வழங்​கு​கிறது.

இந்த ஆதரவு அரசி​யல் லாபத்​துக்​கான ஆதர​வல்ல. இது ஜனநாயகத்​தைப் பாது​காத்​து, மக்​களின் தீர்ப்பை மதிக்​கும் ஆதர​வாகும். தமிழகத்​தில் பாஜக​வின் மறை​முக ஆட்​சியை அனு​ம​திக்​கக் கூடாது என்ற உறு​தி​யின் அடிப்​படை​யில் ஆதரவு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

பாமக உறுப்​பினர் சவுமியா அன்​புமணி: தமிழகத்​தில் 69 சதவீத இட ஒதுக்​கீட்​டைப் பாது​காக்க சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி அனைத்து சமூகங்​களுக்​கும் விகி​தாச்​சார பிர​தி​நி​தித்​து​வம் வழங்க வேண்​டும். பெண்​கள் பாது​காப்பை உறு​தி​செய்ய வேண்​டும். முழு மது​விலக்கு மற்​றும் போதைப்​பொருட்​களை முற்​றி​லு​மாக ஒழிக்க வேண்​டும்.

நீர் மேலாண்​மைத் திட்​டங்​களை செயல்​படுத்த வேண்​டும். தனி​யார் வேலை​வாய்ப்​பு​களில் 80 சதவீதத்தை தமிழக இளைஞர்​களுக்கு ஒதுக்க சட்​ட​மியற்ற வேண்​டும். மேலும், தமிழக நலனுக்கு எதி​ரான நடவடிக்​கைகளை மேற்​கொண்​டால் பாமக எதிர்க்​கும். இன்​றைய வாக்​கெடுப்​பிலிருந்து பாமக விலகி நிற்​கிறது.

விசிக உறுப்​பினர் வன்​னியரசு: பாஜக​வின் மறை​முக செயல்​திட்​ட​மான ஆளுநர் ஆட்​சி​யைத் தடுக்​கும் வித​மாக தவெகவுக்கு ஆதரவு அளிக்​கிறோம். விசிக ஆதர​வைப் பெற்ற அரசு மக்​கள் நலத்​திட்​டங்​களை நிறைவேற்​றி, மாநில உரிமை​களைக் காக்க வேண்​டும்.

கடந்த அரசு ஆணவப் படு​கொலைகளை தடுக்க சிறப்​புச் சட்​டம் இயற்ற நீதிபதி பாட்ஷா தலை​மை​யில் ஆணை​யம் அமைத்​துள்​ளது. இந்த ஆணை​யத்​தின் அறிக்​கையை பெற்று விரை​வில் சட்​டம் இயற்ற வேண்​டும்.

இந்​திய கம்​யூ. உறுப்​பினர் டி.​ராமச்​சந்​திரன்: மாநில உரிமை​களை மத்​திய பாஜக அரசு தொடர்ச்​சி​யாக பறித்​துக் கொண்​டிருக்​கிறது. இது ஜனநாயகத்​துக்கு பேராபத்​தாகும்.

மாநில உரிமை​கள், சமூகநீ​தி, மதச்​சார்​பின்மை பாது​காக்​கப்பட வேண்​டும். வகுப்​பு​வாத சக்​தி​யான பாஜக எந்த காரணத்​தி​லும் பின்​புற வாசல் வழி​யாக (ஆளுநர் ஆட்​சி) தமிழகத்​தில் கால் பதித்​து​விடக்​கூ​டாது என்ற நோக்​கத்​துக்​காக இந்த அரசை ஆதரிக்​கிறோம்.

மார்க்​சிஸ்ட் உறுப்​பினர் செல்​லசு​வாமி: மறை​முக​மாக குடியரசுத் தலை​வர் ஆட்​சியை அமைக்​கும் சதித் திட்​டத்தை நிறைவேற்​றும் வகை​யில் ஆளுநர் செயல்​பட்​டார். இந்த ஆபத்​திலிருந்​து, தமிழகத்தை காப்​பாற்​றும் நோக்​கத்​தோடும் இந்த அரசுக்கு ஆதரவை தெரி​வித்​துக் கொள்​கிறோம்.

இந்த அரசு மக்​கள் நலத் திட்​டங்​களை அறிவிக்​கும்​போது அதை வரவேற்​போம். அதேசம​யம் பாதகம் அமைக்​குமெனில் அதை எதிர்ப்​போம்.

மஜக உறுப்​பினர் தமி​முன் அன்​சா​ரி: தமிழகத்​தில் ஒரு முற்​போக்​கான ஜனநாயகத்தை வளர்த்​தெடுக்க வேண்​டிய கடமை நம் எல்​லோருக்​கும் உள்​ளது.

முதல்​வ​ராகப் பொறுப்​பேற்ற 4 நாட்​களில் பல்​வேறு நல்ல விஷ​யங்​களை முன்​னெடுத்து இருப்​ப​தற்கு எனது வாழ்த்​துகள். எனினும் முதல்​வரின் நம்​பிக்கை கோரும் தீர்​மானத்​தில் எனது எதிர்​நிலைப்​பாட்டை தெரி​வித்​துக்​கொள்​கிறேன்.

பாஜக உறுப்​பினர் எம்​.​போஜ​ராஜன்: முதல்​வரின் நம்​பிக்கை தீர்​மானத்​தில் பலர் உணர்ச்​சிவச​மாக, பாஜக​வுக்கு எதி​ரான பிரச்​சா​ரக் கூட்​டம்​போல், மாண்பை மீறிப் பேசி​விட்​டார்​கள்.

கடந்த காலத்​தில் இரண்டே 2 உறுப்​பினர்​களைக் கொண்டு நாடாளு​மன்​றத்​தில் செயல்​பட்​டு, இன்​றைக்கு பல மாநிலங்​களில் ஆளுங்​கட்​சி​யாக மாறி​யிருக்​கிறோம். நல்ல திட்​டங்​களுக்கு பாஜக ஆதர​வாக இருக்​கும். இந்த தீர்​மானத்​தில் பாஜக நடுநிலை வகிக்​கிறது.

உறுப்​பினர் காம​ராஜ்: முதல்​வர் விஜய்க்கு எனது ஆதரவு 5 ஆண்​டுக்​கால​மும் இருக்​கும். சிறப்​பான ஆட்​சியை தவெக அரசு வழங்​கும். தமிழகம் முழு​வதை​யும் பாது​காக்​கும் முதல்​வர் விஜய் என்​னை​யும் பாது​காப்​பார் என்று நம்​பு​கிறேன் இவ்​வாறு அவர்​கள் பேசினர்.

இதுத​விர, தவெக தீர்​மானத்​துக்கு ஆதர​வாக ஐயூஎம்​எல் உறுப்​பினர் ஏ.எம்​.ஷாஜ ஹானும், எதி​ராக கொமதேக உறுப்​பினர் நித்​தி​யானந்​தனும் தங்​கள் கருத்​துகளைப் பகிர்ந்​தனர்.

முன்​ன​தாக அமமுக​விலிருந்து நீக்​கப்​பட்ட எம்​எல்ஏ காம​ராஜ் பேசும்​போது, அவர் பேசிய சில கருத்​துகளுக்​கு இபிஎஸ்​ தரப்​பு அதிமுக​வினர்​ எதிர்ப்​புத்​ தெரி​வித்​தனர்​ என்​பது குறிப்பிடத்தக்கது.

தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு சட்டப்பேரவையில் அரசியல் கட்சிகளின் ஆதரவு - எதிர்ப்பு - நடுநிலை நிலைப்பாடு
பேரறிவாளன் வழக்கறிஞர் பதிவு: காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை - உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in