கும்மிடிப்பூண்டி தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரக் களம் எப்படி? - ஒரு விசிட்

கும்​மிடிப்​பூண்டி தொகு​தி​யில், வாக​னத்​தில் வீதிதோறும் சென்று வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டுள்ள திமுக வேட்​பாளர் டி.ஜெ.கோ​விந்​த​ராஜன்.

கும்​மிடிப்​பூண்டி தொகு​தி​யில், வாக​னத்​தில் வீதிதோறும் சென்று வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டுள்ள திமுக வேட்​பாளர் டி.ஜெ.கோ​விந்​த​ராஜன்.

Updated on
2 min read

கும்மிடிப்பூண்டி சட்​டப்​பேரவை தொகு​தி​யில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்​சி, தமிழக வெற்​றிக்​கழகம் உள்ளிட்ட அரசி​யல் கட்​சிகள் மற்​றும் சுயேச்​சைகள் என 15 பேர் களத்​தில்உள்​ளனர்.

திமுக - டி.ஜெ.கோ​விந்​த​ராஜன்

திமுக வேட்​பாள​ரான டி.ஜெ. கோவிந்​த​ராஜனை ஆதரித்​து, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் கூட்​ட​ணிக் கட்சி தலைவர்​கள் பிரச்​சா​ரம் செய்​துள்​ளனர்.

தற்​போதைய எம்​எல்​ஏ​வான டி.ஜெ.கோ​விந்​த​ராஜன், கடந்த 5 ஆண்​டு​களில் நிறைவேற்​றப்​பட்டநலத்​திட்ட பணிகள் குறித்து எடுத்​துரைத்​தும், திமுக தேர்​தல் அறிக்கையை முன் வைத்​தும் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடுபட்டு வரு​கிறார்.

மேலும், சுற்​றுச்சூழல் பாதிப்பை கட்​டுப்​படுத்த, ‘தூய்மை கும்மிடிப்பூண்டி’ திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என வாக்குறுதி அளித்​தும் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கிறார்.

பாமக உள்​ளிட்ட கூட்​டணி கட்சி நிர்​வாகி​களு​டன் வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரும் அதி​முக வேட்​பாளர் வி.சு​தாகர்.

பாமக உள்​ளிட்ட கூட்​டணி கட்சி நிர்​வாகி​களு​டன் வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரும் அதி​முக வேட்​பாளர் வி.சு​தாகர்.

அதி​முக - வி.சு​தாகர்

அதி​முக வேட்​பாள​ரான வி.சு​தாகரை ஆதரித்​து, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, நடிகை விந்​தியா உள்​ளிட்​டோர் பிரச்​சா​ரம் செய்​துள்​ளனர். கிராமப் பகு​தி​களில் சாலை, தெரு விளக்​கு​கள், போதிய குடிநீர், பேருந்து வசதி​கள் செய்து தரு​வேன் என உறு​தி​யளித்து வாக்கு சேகரித்து வரு​கிறார்.

அதி​முக தேர்​தல் அறிக்​கை​யில் குறிப்​பிட்​டுள்ள வாக்குறுதி​கள் நிறைவேற்​றப்​படும் எனவும் எடுத்​துரைத்து தீவிர தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கிறார்.

கட்சி நிர்​வாகி​களு​டன் தீவிர தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரும் நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் இரா.ஸ்ரீதர்.

கட்சி நிர்​வாகி​களு​டன் தீவிர தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரும் நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் இரா.ஸ்ரீதர்.

நாம் தமிழர் கட்சி - இரா.ஸ்ரீதர்

நாதக வேட்​பாளர் இரா.ஸ்ரீதரை ஆதரித்​து, சீமான் பிரச்சாரம் செய்​துள்​ளார். தொழிற்​சாலைகளால் ஏற்​படும் காற்​று, நிலத்​தடி நீரில் ஏற்​படும் மாசுவை தடுக்க நடவடிக்கை எடுக்​கப்​படும், தொகு​தி​யில் அரசு கலைக்​கல்லூரி அமைக்​கப்​படும், சென்னை - கொல்​கத்தா தேசிய நெடுஞ்​சாலை​யில், எளாவூர், கும்மிடிப்பூண்டி உள்​ளிட்ட பகு​தி​களில் உள்ள பேருந்து நிறுத்​தங்​களில் குடிநீர், கழிவறை, கண்​காணிப்பு கேம​ராக்​கள் ஆகிய​வற்​றுடன் நிழற்​குடைகள் அமைக்​கப்​படும் என வாக்​குறுதி அளித்து வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கிறார்.

தமிழக வெற்​றிக் கழகம் - எஸ்​.​விஜயகு​மார்

தவெக வேட்​பாளர் எஸ்​.​விஜயகு​மார், தமிழகம் போதைப்​பொருள் இல்​லாத மாநில​மாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்​படும், உயர்​கல்வி பயிலும் மாணவர்​களுக்கு ரூ.20 லட்​சம் வரை பிணை​யில்லா கடன் வழங்​கப்​படும் என்பன உள்​ளிட்ட தேர்​தல் வாக்​குறு​தி​களை முன் வைத்து தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கிறார்.

வீதிதோறும் வாக்​காளர்​களைச் சந்​தித்து வாக்​கு சேகரிக்​கும்​ தமிழக வெற்​றிக்​ கழக வேட்​பாளர்​ எஸ்​.விஜயகு​மார்​.

வீதிதோறும் வாக்​காளர்​களைச் சந்​தித்து வாக்​கு சேகரிக்​கும்​ தமிழக வெற்​றிக்​ கழக வேட்​பாளர்​ எஸ்​.விஜயகு​மார்​.

தேர்​தலுக்கு இன்​னும் சில தினங்​களே உள்ள நிலை​யில் கோடை வெயிலுக்கு இணை​யாக கட்​சிகளின் தேர்​தல் பரப்​புரை​யும் அனல் ​பறக்​கிறது.

கும்​மிடிப்​பூண்டி தொகு​தி​யில், வாக​னத்​தில் வீதிதோறும் சென்று வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டுள்ள திமுக வேட்​பாளர் டி.ஜெ.கோ​விந்​த​ராஜன்.

கோவை வடக்கு தொகுதியில் வாகை சூடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in