வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வு ரத்து: அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வு ரத்து: அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
Updated on
2 min read

சென்னை: ​வி​னாத்​தாள் கசிந்​த​தால் நீட் தேர்வு ரத்​துசெய்​யப்​பட்​டிருப்​ப​தற்​கு, தமிழக அரசி​யல் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இது​வரை நடத்​தப்​பட்ட நீட் தேர்​வு​களில் எந்த தேர்​வும் புகார் இல்​லாமல் நடத்​தப்​பட​வில்லை என்​றும் அவர்​கள் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளனர்.

ராஜஸ்​தானில் வினாத்​தாள் கசிந்​ததை தொடர்ந்து மருத்​துவ படிப்​புக்​கான நீட் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​கு, தமிழக அரசி​யல் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின்: இந்த ஆண்​டும் நீட் தேர்​வில் முறை​கேடு​கள் வெளிவந்​து, தேர்வு ரத்து செய்​யப்​பட்டு இருக்​கிறது. இதனால், லட்​சக்​கணக்​கான மாணவர்​கள் மன உளைச்​சலுக்கு ஆளாகி​யிருக்​கிறார்​கள். ஒரு தேர்​வின் ஒவ்​வொரு படிநிலை​யிலும் மோசடி நிறைந்​த​தாகவே நீட் தேர்வு இருந்து வரு​கிறது.

நான் தொடர்ந்து சொல்லி வரு​வது​போல, நீட் தேர்​வில் முறை​கேடு இல்​லை, நீட் தேர்வே ஒரு முறை​கேடு தான். ஆண்​டு​தோறும் மாணவர்​களின் வாழ்க்​கையோடும், மாநில மருத்​து​வக் கட்​டமைப்​பின் எதிர்​காலத்​தோடும், மக்​களின் உயிரோடும் விளை​யாடும் நீட் தேர்​வு​முறை ஒழிக்​கப்பட வேண்​டும்.

மீண்​டும் நீட் தேர்வு நடத்​தி​னால் ஏற்​படும் கால​தாமதம், மாணவர்​களின் உயர்​கல்விக் கனவில் குழப்​பங்​களைத்​தான் ஏற்​படுத்​தும். அதனால், பழையபடி பிளஸ் 2 பொதுத்​தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யிலேயே எம்​பிபிஎஸ் இடங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்பட வேண்​டும்.

தமிழகத்​தில் புதி​தாக அமைந்​திருக்​கும் அரசும், நீட் தேர்​வுக்கு எதி​ரான தனது உறு​தி​யான நிலைப்​பாட்டை அறிவிக்க வேண்​டும். நீட் தேர்​வில் இருந்து தமிழகத்​துக்கு விலக்கு கோரிய எங்​கள் திரா​விட மாடல் அரசின் சட்ட நடவடிக்​கைகளை, புதிய அரசும் கையிலெடுத்​து, நம் முயற்​சி​யில் வெற்றி பெற வேண்​டும் எனக் கேட்​டுக் கொள்​கிறேன்.

பாமக தலை​வர் அன்​புமணி ராம​தாஸ்: கடந்த மே 3-ஆம் தேதி நடத்​தப்​பட்ட நீட் தேர்​வில் கேட்​கப்​பட்ட 200 வினாக்​களில் 80 சதவீதத்​துக்​கும் கூடு​தலான வினாக்​கள் தேர்​வுக்கு பல நாட்​களுக்கு முன்பே ராஜஸ்​தானில் வெளி​யாகி விட்​ட​தாக​வும், இது தொடர்​பாக, அம்​மாநில காவல்​துறை வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரிப்​ப​தாக​வும் வெளி​யாகி​யுள்ள செய்​தி​கள் அதிர்ச்​சி​யளிக்​கின்​றன.

மருத்​து​வம் பயிலும் மாணவர்​களின் எதிர்​காலம் சார்ந்த விஷ​யத்​தில் தேசிய தேர்வு முகமை தொடர்ந்து அலட்​சி​ய​மாக நடந்து கொள்​வது கண்​டிக்​கத்​தக்​கது.

நீட் தேர்வை மத்​திய அரசு நிரந்​தர​மாக ரத்து செய்ய வேண்​டும். ராஜஸ்​தான் உள்​ளிட்ட மாநிலங்​களில் நீட் தேர்வு வினாக்​கள் கசிந்​தது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்​தி, அதற்கு காரண​மானவர்​களை தண்​டிக்க வேண்​டும்.

மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன்: நீட் நுழைவுத் தேர்​வுக்​காக இரவு பகலாகப் படித்த 22 லட்​சம் மாணவர்​களின் உழைப்​பும், கனவும் குற்​றக்​கும்​பல்​களால் சிதைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த மன உளைச்​சலுக்​குப் பொறுப்​பேற்​கப் போவது யார்? இது​வரை ஒரு நீட் தேர்வு கூட முறை​கேடு புகார்​கள் இல்​லாமல் நடந்​த​தாக எனக்கு நினை​வில்​லை.

இதனால்​தான் கல்​வியை மீண்​டும் மாநிலப் பட்​டியலுக்​குக் கொண்டு வரவேண்​டுமென போராடிக் கொண்​டிருக்​கிறோம். நீட் எனும் அநீ​தி​யான தேர்​விலிருந்​தும், அதன் பின்​னால் இயங்​கும் மாஃபி​யாக்​களிட​மிருந்​தும் இந்​திய மாணவர்​களைப் பாது​காக்க வேண்​டும்.

தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி​யின் தலை​வர் தி. வேல்​முரு​கன்: ஆண்​டு​தோறும் நீட் தேர்​வில் முறை​கேடு நடை​பெறு​வ​தாக தொடர்ந்து புகார்​கள் எழுந்த வண்​ணம் உள்​ளன. வணிக மயமான இந்த நீட் தேர்வை மத்​திய அரசு உடனடி​யாக ரத்து செய்ய வேண்டும்.

வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வு ரத்து: அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
ஆவடி | செவிலியர் பணி வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in