‘திமுக அரசின் ஊழல் கோட்டை இடிந்து விழும்’ - கே.என்.நேருவை முன்வைத்து அரசியல் தலைவர்கள் விமர்சனம்

‘இமேஜை கெடுக்க சூழ்ச்சிகள்’ என திமுக ரியாக்‌ஷன்
‘திமுக அரசின் ஊழல் கோட்டை இடிந்து விழும்’ - கே.என்.நேருவை முன்வைத்து அரசியல் தலைவர்கள் விமர்சனம்
Updated on
3 min read

சென்னை: அமைச்​சர் கே.என்​.நேரு மீது வழக்​குப் ​ப​திய உயர் நீதிமன்​றம் உத்​தர​விட்​டதை தொடர்ந்​து, ‘திமுக அரசின் ஊழல் கோட்டை இடிந்​து​ விழும்; கவுண்​ட​வுன் தொடங்​கி​விட்​டது’ என அரசி​யல் தலை​வர்​கள் விமர்​சித்​துள்​ளனர். இதற்கு திமுகவும் எதிர்வினையாற்றியுள்ளது.

தமிழக அரசின் நகராட்சி நிர்​வாகத் துறை​யில் 2,538 பொறி​யாளர்​கள் மற்​றும் அதி​காரி​களை நியமிக்க ஒரு பணிக்கு ரூ.25 லட்​சம் முதல் ரூ.35 லட்​சம் வீதம் மொத்​தம் ரூ.888 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்​பட்​ட​தாக சம்​பந்​தப்​பட்ட துறை​யின் அமைச்​சர் உள்ளிட்​டோர் மீது வழக்கு பதிவு செய்​யும்​ படி தமிழக காவல்​துறையின் லஞ்ச தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் ஆணை​யிட்​டுள்​ளது. இது தொடர்​பாக அரசி​யல் தலை​வர்​கள் வெளியிட்​டுள்ள கருத்துகள்:

பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்:

“திமுக அமைச்​சர் நேரு, அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகார் மீதும் கூடிய விரை​வில் வழக்கு பதிந்​து, உண்மை வெளிக்​கொணரப்​படும் என்​னும் நம்​பிக்​கையை இந்த நீதி​மன்ற உத்​தரவு ஏற்​படுத்​துகிறது.

மொத்​தத்​தில், மக்​கள் வரிப்​பணத்தை உறிஞ்​சி, கமிஷனில் கொழுக்​கும் திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்​குநூறாக இடிந்து விழும் நாளுக்​கான கவுண்​ட​வுன் இன்​று தொடங்​கி​விட்​டது.”

பாமக தலை​வர் அன்​புமணி:

“திமுக​வின் ஊழல் கோட்டை இடிந்து தரைமட்​ட​மாகும். அதனால் மக்​கள் மத்​தி​யில் ஏற்​படும் அதிர்​வு​களால் வரும் தேர்​தலில் திமுக அடியோடு துடைத்து எறியப்​படும்.”

பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை:

“அமைச்​சர் நேரு​வின் ஒரு துறை​யில் மட்​டுமே ரூ.2,300 கோடி ஊழல் என்​றால் குற்​றம்​சாட்​டப்​பட்ட அமைச்​சர்​கள் அத்​தனை பேரும் செய்​திருக்​கின்ற ஊழல்​களை கணக்​கிட்​டால் மக்​களே உங்​கள் பணம் எவ்​வளவு சுரண்​டப்​பட்டு இருக்​கிறது என்​பதை நீங்​கள் புரிந்து கொள்ள வேண்​டும். மக்​களின் பணம் பாது​காக்​கப்பட வேண்​டும் என்​றால் நிச்​சய​மாக தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிக்கு வர வேண்​டும்.”

பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை:

“தெளி​வான ஆதா​ரங்​களு​டன், அமலாக்​கத்துறை கடிதம் அனுப்​பி​யும், அமைச்​சர் கே.என்​.நேரு மீது வழக்​குப் பதிவு செய்​யாமல் இருந்த முதல்​வர் ஸ்டா​லின் தற்​போது என்ன பதில் கூறப் போகிறார். திமுக ஆட்​சி​யில், ஒரு ஆண்​டில், ஒரு துறை​யில் மட்​டுமே, சுமார் ரூ.2,300 கோடி ஊழல் நடந்​திருக்​கிறது என்​றால், தமிழகம் என்ன நிலை​யில் இருக்​கிறது?”

தவெக தலை​வர் விஜய்:

”கபட நாடகத் திமுக அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1,020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் திமுக அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது. நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஊழல் மலிந்த ஸ்டாலின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத திமுக அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1,000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1,020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் திமுக அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்.”

திமுக ரியாக்‌ஷன்:

அமைச்சர் கே.என்.நேரு மீதான நடவடிக்கை தேர்தல் நேரத்தில் திமுகவின் நற்பெயரை கெடுக்கும் சூழ்ச்சி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர.எஸ். பாரதி குற்றம்சாட்டினார். அவர் கூறியது: “அமைச்சர் கே.என்.நேரு மீது சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருந்த போது, அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்ததாகச் சொல்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சிபிஐ வழக்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த முக்கிய வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

சிபிஐ வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அமலாக்கத்துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும் அவர்கள் தமிழ்நாடு அரசை நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டனர். முதல்வர் உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார்.

தற்போது அந்த விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு ஏற்கனவே விசாரணை நடத்திக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

இது ஒன்றும் பின்னடைவு அல்ல, திமுகவின் சட்டத்துறை இதனைச் சட்டரீதியாகச் சந்தித்து முறியடிக்கத் தயாராக இருக்கிறது. ஏற்கெனவே, அமைச்சர் நேரு மீது தொடரப்பட்ட வழக்குகளை சந்தித்து அவர் வெற்றி பெற்றுள்ளார். இப்போது கூறப்படும் குற்றச்சாட்டையும் பொய் என்று அவர் நிரூபிப்பார்.

பாஜக அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை நள்ளிரவில் கைது செய்து 100 நாட்கள் சிறையில் வைத்தும், மூன்று ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 2016-ல் லாரிகளில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் வழக்கில் 10 ஆண்டுகள் ஆகியும் சிபிஐ இதுவரை முதல் தகவல் அறிக்கையைக் கூடப் பதிவு செய்யவில்லை.

அமைச்சர் நேரு தற்போது 41 தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தேர்தல் பணியைப் பார்த்துப் பொறாமைப்பட்டு எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின் பேரில் டெல்லியில் இருப்பவர்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.

இவையெல்லாம் தேர்தல் நேரத்தில் முதல்வர் மற்றும் திமுகவின் நற்பெயரை கெடுப்பதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிகள். கே.என். நேரு இத்தகைய அச்சுறுத்தல்களுக்குப் பயப்படமாட்டார்” என்று அவர் கூறினார்.

‘திமுக அரசின் ஊழல் கோட்டை இடிந்து விழும்’ - கே.என்.நேருவை முன்வைத்து அரசியல் தலைவர்கள் விமர்சனம்
அமைச்சர் நேரு மீது உடனே வழக்கு பதிவு: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in