நடிகர் அஜித்குமாரின் தாயார் உடல் தகனம்: அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி

நடிகர் அஜித்குமாரின் தாயார் உடல் தகனம்: அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி
Updated on
1 min read

சென்னை: நடிகர் அஜித்குமாரின் தாயார் கால​மான நிலை​யில், அவரது உடல் சென்​னை​யில் நேற்று தகனம் செய்​யப்​பட்​டது. முன்​ன​தாக, அவரது உடலுக்கு அரசி​யல் தலை​வர்​கள், திரை​யுல​கினர் அஞ்​சலி செலுத்​தினர்.

தமிழ் திரை​யுல​கின் முன்​னணி நடிகர் அஜித்​கு​மாரின் தாயார் மோகினி மணி (84), வயது மூப்​பின் காரண​மாக ஏற்​படக்​கூடிய உடல்​நலக் குறை​வால் சென்​னை​யில் நேற்​று​முன்​தினம் கால​மா​னார். இதையொட்​டி, கார் பந்​த​யத்​துக்​காக துபா​யில் இருந்த அஜித்​கு​மார், உடனடி​யாக சென்னை திரும்​பி​னார்.

சென்​னை, பால​வாக்​கம் இல்​லத்​தில் வைக்​கப்​பட்​டிருந்த மோகினி மணி​யின் உடலுக்​கு, முதல்​வர் விஜய் நேற்​று​முன்​தினம் நேரில் சென்று அஞ்​சலி செலுத்​தி​னார். அதைத் தொடர்ந்​து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், நடிகர்​கள் சரத்​கு​மார், சிவா, பிரசன்​னா, நாசர், இயக்​குநர்​கள் ஏ.எல்​.​ விஜய், ஆதிக் ரவிச்​சந்​திரன், தயாரிப்​பாளர் எஸ்​.​தாணு உட்பட பலர் அஜித்​கு​மார் தாயாரின் உடலுக்கு நேற்று அஞ்​சலி செலுத்​தினர்.

இதைத் தொடர்ந்​து, அஜித்​கு​மாரின் தாயார் மோகினி மணி​யின் இறுதி ஊர்​வலம் நேற்று காலை 9 மணி அளவில் வீட்​டில் இருந்து புறப்​பட்​டு, பெசன்ட்​நகர் மின் மயானத்​துக்கு அவரது உடல் கொண்டு செல்​லப்​பட்​டது.

பெசன்ட் நகர் மின் மயானத்​துக்கு உடல் வந்​ததும் அஜித்​கு​மார், தனது தாயாரின் உடலை மின் மயானத்​துக்கு சுமந்து சென்​றார். அங்கு குடும்​பத்​தினர் முன்​னிலை​யில், அஜித்​கு​மாரின் தாயார் மோகினி மணி​யின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்​தப்​பட்​டு, அவரது உடல் தகனம் செய்​யப்​பட்​டது.

இறுதி ஊர்​வலத்​தி​லும், மின் மயானத்​தி​லும் ஏராள​மான போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். இறு​தி​யில் அவர்​களுக்கு நடிகர் அஜித்​கு​மார்​ நேரில்​ நன்றி தெரிவித்தார்.

நடிகர் அஜித்குமாரின் தாயார் உடல் தகனம்: அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி
கூடைப்பந்து சம்மேளன நிர்வாகியாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நீடிப்பது தவறு: அதிமுக எம்.பி. இன்பதுரை குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in