அதிகாரக் கட்சியின் ‘ஆர்ட்’ பிரமுகரின் நகர்வுகள் | உள்குத்து உளவாளி

அதிகாரக் கட்சியின் ‘ஆர்ட்’ பிரமுகரின் நகர்வுகள் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

அதிகாரக் கட்சியின் துணைப் பொறுப்பில் இருக்கும் அன்பான ‘ஆர்ட்’ பிரமுகர் இம்முறை தனது மகன் ‘ஆர்ட் சூரியனை’ தலைநகரில் இருக்கும் ‘பாக்கம்’ தொகுதிக்கு பதமாக தயார்படுத்துகிறாராம். அருவி மாவட்டத்தில் தனது சொந்த ஊரில்தான் முதலில் மகனுக்கு களம் தேடினாராம். ஆனால், “இங்கே இருக்கிற உள்ளடி கூத்துகள்ல தம்பிய தட்டிவிட்டாலும் விட்டுருவாங்கண்ணே” என்று அங்கிருக்கும் ‘ஆர்ட்டின்’ ஆத்ம விசுவாசிகள் அலாரம் அடித்தார்களாம்.

இதையடுத்தே, ‘பாக்கத்தை’ நோக்கித் திரும்பி இருக்கிறாராம் ‘ஆர்ட்’. கடந்த முறை இந்தத் தொகுதியை ‘வர்த்தக தலைவரின்’ ராஜ வாரிசுக்கு கொடுத்து எம்எல்ஏ ஆக்கியது ஆலயக் கட்சி. இம்முறை ’ஆர்ட்’ பிரமுகரின் மகனுக்காக தனது மகனின் தொகுதியை விட்டுக் கொடுப்பாரா ‘வர்த்தக தலைவர்’ என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிகாரக் கட்சியின் ‘ஆர்ட்’ பிரமுகரின் நகர்வுகள் | உள்குத்து உளவாளி
குக்கர் தலைவர் ‘அணுகுமுறை’யில் மாற்றம் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in