குக்கர் தலைவர் ‘அணுகுமுறை’யில் மாற்றம் | உள்குத்து உளவாளி

குக்கர் தலைவர் ‘அணுகுமுறை’யில் மாற்றம் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

இலைக் கட்சி கூட்டணியில் ‘இஷ்டப்பட்டு’ சேர்ந்திருக்கும் குக்கர் தலைவர், அண்மைக் காலமாக ‘இலைக் கட்சி கூட்டணி’ என்று சொல்வதை தவிர்த்து, “நாங்கள் நேஷனல் கூட்டணியில் இருக்கிறோம்” என்று தடம்மாறி பேசி வருகிறாராம். இது குறித்து இலைக் கட்சியின் முக்கிய தலைவர்கள், எடக்கானவரிடம் சந்தேகம் எழுப்பினார்களாம்.

ஆனால், அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத அவர், “குக்கர் பார்ட்டி உங்கள் ஊர் பக்கம் வந்தால் பெருசா ஒண்ணும் கண்டுக்க வேண்டாம்” என்று அலெர்ட் செய்து வைத்திருக்கிறாராம்.

இதனிடையே, செய்தியாளர்கள் சந்திப்புகளில், “நீங்கள் எடக்கானவரை ஏத்துக்கலையா... அல்லது அவரது தலைமையை ஏத்துக்கலையா?” என குக்கர் தலைவரிடம் குண்டக்க மண்டக்க கேள்விகளை எழுப்பி, அவர் வாயாலேயே எதையாவது சொல்ல வைக்க ‘வாடகைச் செய்தியாளர்கள்’ சிலரை களத்தில் இறக்கிவிட்டிருக்கிறதாம் இலைக் கட்சி.

குக்கர் தலைவர் ‘அணுகுமுறை’யில் மாற்றம் | உள்குத்து உளவாளி
இலைக் கட்சியின் ‘அவார்டு’ மாவட்ட ‘அதிரடி’கள் | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in