‘அல்வா சிட்டி’யில் சூரிய கட்சிக்கு ஷாக் | உள்குத்து உளவாளி

‘அல்வா சிட்டி’யில் சூரிய கட்சிக்கு ஷாக் | உள்குத்து உளவாளி

Published on

‘அல்வா சிட்டி’ யில் இந்த முறை எப்படியும் ஜெயித்தாக வேண்டும். இல்லாவிட்டால் அங்குள்ள யாருக்கும் பதவி தப்பாது என சில மாதங்களுக்கு முன்பே சூரியக் கழகத்தினருக்கு சுருக் வார்னிங் கொடுத்திருந்தார் அதன் தலைவர். இதன் காரணம், அங்கு போட்டியிடும் தாமரைக் கட்சி தலைவரை தோற்கடித்து டெல்லி தலைவர்களுக்கு ‘நல்ல’ சேதி அனுப்ப வேண்டும் என்பது தான்.

ஆனால், தலைவர் கொடுத்த வார்னிங்கை பெரிதுபடுத்தாமல், தாமரைக் கட்சி தலைவரிடமே ‘அல்வா சிட்டி’ சூரியக் கட்சி முக்கிய புள்ளிகள் சிலர் சரணாகதி ஆகிவிட்டார்களாம். அங்கே தாமரையை மலரவைக்க ஏதுவாக வேட்பாளர் பரிந்துரையிலும் சூரியக் கட்சியின் முக்கிய தலைகள் சிலர் உள்ளடிகளை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

இதன் பின்னணியில் வேறு சில ‘கவனிப்பு’களும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இத்தனைக்கும் இது சூரியக் கட்சி பெண் வாரிசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டம். இந்த உள்ளடி வேலைகள் தலைமையின் காதுகளை எட்டியதை அடுத்து. ‘அல்வா சிட்டி’ அடலேறுகள் அத்தனை பேரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தாக்கீது போயிருக்கிறதாம். அநேகமாக இந்த வாரம் ஆலயத்தில் ‘அதிரடி அதாலத்’ நடக்கலாம் என்கிறார்கள்.

‘அல்வா சிட்டி’யில் சூரிய கட்சிக்கு ஷாக் | உள்குத்து உளவாளி
வாடகைக் கட்சியை ‘வாங்கும்’ முயற்சி | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in