விசில் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நிலவரம் | உள்குத்து உளவாளி

விசில் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நிலவரம் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

விசில் கட்சியில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி 23-ம் தேதி அறிவிப்பதாக இருந்தார்களாம். ஆனால், கதர் பார்ட்டிகள் 26-ம் தேதி வரை அவகாசம் கேட்டதால் அதை ஒத்திவைத்தார்களாம்.

கதர் தலைகளின் பதிலைப் பொறுத்து இந்த மாத இறுதிக்குள் விசில் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்கிறார்கள். முதல்கட்டமாக, முக்கிய தலைகள் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் யோசனையில் இருக்கிறார்களாம்.

அதன்படி, விசில் நாயகர் தலைநகரில் இருக்கும் ‘பூர்’ தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்கிறார்கள். இந்தத் தொகுதியில் இருக்கும் பட்டியலின வாக்குகளையும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கும் ரசிகர்மன்றத்து நண்பா - நண்பிகளையும் கணக்குப் போட்டே விசில் நாயகர் இங்கே களமிறங்க திட்டமிடுகிறாராம்.

அதேசமயம், தலைவர் போட்டியிடும் தொகுதிக்கு பக்கத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதற்காக பக்கத்தில் உள்ள ‘வாக்கம்’ தொகுதியை தனக்காக தயார்படுத்துகிறாராம் ‘வில்’லாள கண்டரான கட்சியின் ‘குலுக்கல்’ மாப்பிள்ளை.

இதேபோல், விசில் பார்ட்டியின் பிஸியான ‘மகிழ்ச்சி’ பிரமுகர் ’அங்காடித் தெரு’ தொகுதியில் இறங்கி ஆழம் பார்க்க ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

விசில் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நிலவரம் | உள்குத்து உளவாளி
சிம்மக் கட்சியின் நிலைமை | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in