

மாங்கனி கட்சியின் மகன் தலைவரை இலைக்கட்சி சமயம் பார்த்து இழுத்துப் போட்டுவிட்டது. இதனால், தந்தை தலைவருக்கு வேறு சேனல் இல்லை. பேசாமல், சூரியக் கூட்டணியில் ஐக்கியமாகி விடலாம் என அய்யாவை சுற்றி இருப்பவர்கள் ஐடியா கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
ஒருவேளை, அப்படி முடிவெடுத்துப் புறப்பட்டால், “நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொன்னோம் பார்த்தீர்களா... சூரியக் கூட்டணிக்குப் போவதற்காகத்தான் இத்தனை சதிகளையும் செய்திருக்கிறார்கள்” என்று பெற்ற மகன் பெரிதாக தூற்றுவாரே என்று தயங்குகிறாராம் அய்யா.
அதேசமயம், பனையூர் பார்ட்டியையும் நம்ப முடியாமல் இருக்கிறாராம். இதையடுத்து, அய்யாவுக்கு நெருக்கமான சிலர், சூரியக் கட்சியின் மூத்த ‘துரையான’வரிடம் சாதிப் பாசத்துடன் சகஜமாகப் பேசி, “நீங்க கொஞ்சம் அய்யாகிட்டா பேசுனா நல்லதுண்ணே” என்று தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம்.