நடிகர் கட்சி அழைப்பை நிராகரித்த ‘மூர்த்தி’ | உள்குத்து உளவாளி

நடிகர் கட்சி அழைப்பை நிராகரித்த ‘மூர்த்தி’ | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

நடிகர் கட்சிக்கு ஆள்தூக்கும் வேலைகளை ஆளுக்கொரு பக்கமாய் போட்டி போட்டுக் கொண்டு செய்கிறார்களாம் கட்சியின் தலைமையிடத்து தாசில்தார்கள். இவர்களால் இறக்கிவிடப்பட்டுள்ள சிப்பாய்கள் மாநிலம் முழுவதும் அனைத்துக் கட்சிகளிலும் அதிருப்தியுடன் இருக்கும் பிரபல முகங்களையும், மக்கள் செல்வாக்குள்ள புதுமுகங்களையும் தேடிப் பிடித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களாம். அவர்கள் சம்மதம் சொன்னதும் அவர்களைப் பற்றிய தரவுகள் குறித்து தனித் தனியாக கோப்புகளைத் தயாரித்து, தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கிறார்களாம்.

இந்த கோப்புகளில் இருப்பவர்களை தனித் தனியாக வரவைத்து தலைமையிடத்து தாசில்தார்கள் நேர்காணல் நடத்துகிறார்களாம். அதில் திருப்தி இருந்தால் மட்டுமே தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறார்களாம்.

அந்த வகையில், தங்கள் பக்கம் பட்டியலினத்துக் கட்சி ஒன்றை இழுத்தால் சரியாக இருக்கும் எனக் கணக்குப் போட்டு, இலைக் கட்சிக்கு நம்பிக்கையாக இருக்கும் பட்டியலின ‘மூர்த்தி’ தலைவரிடம் நடிகர் கட்சியில் இருக்கும் எக்ஸ் ‘ஆபீஸர்’ அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.

ஆனால், “இலைக் கட்சியில் எங்களுக்கு ரெண்டு தொகுதி தர்றதா சொல்லிருக்காங்களே...” என்று ‘பூவை’ப் போல் சிரித்துக் கொண்டே சொல்லி அந்த அழைப்பை நிராகரித்து விட்டாராம் ஜெகஜாலமான ‘மூர்த்தி’ தலைவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in