மிரட்டும் ‘கரம்’காரர்கள்... சூரிய கட்சியின் ‘பிளான் பி’ | உள்குத்து உளவாளி

மிரட்டும் ‘கரம்’காரர்கள்... சூரிய கட்சியின் ‘பிளான் பி’ | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

நடிகர் கட்சியை வைத்து தங்களை மிரட்டிக் கொண்டே இருக்கும் ‘கரம்’கார்களை ‘போனால் போகட்டும்’ லிஸ்ட்டில் ஏற்றிவிட்டதாம் சூரியக் கட்சி. தங்கள் தொகுதியில் உள்ள சொந்தப் பிரச்சினைகளை மனதில் வைத்தே ‘கரம்’கார்கள் சிலர் சூரியனை சுட்டுப்பார்க்க நினைக்கிறார்களாம்.

இப்படியாகப்பட்டவர்களின் பேச்சைக் கேட்டு ‘கரம்’ பார்ட்டி தலைமை கூட்டணி முடிவை மாற்றினால் அதற்கும் தயாராகிவிட்ட சூரியக் கட்சி, குக்கர் கம்பெனியாரிடமும் ‘வாசனைத் திரவிய’ தலைவரிடமும் வேண்டிய ஆட்கள் மூலம் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டதாம்.

அப்படியே ‘கோயம்பேடு’ கட்சிக்கும் கொக்கி போடும் வேலைகளை சாதி ’டச்சில்’ சிலர் சாதிக்கப் புறப்பட்டிருக்கிறார்களாம். ‘கரம்’கார்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளை இவர்களுக்கெல்லாம் பிரித்துத் தந்து இழுத்துப் போட்டால் இழப்பைச் சமாளிக்கலாம் என கணிக்கிறதாம் சூரியக் கட்சி.

இதனிடையே, டெல்லியிலிருந்து சூரியக் கட்சியின் ‘மில்க்’ தலைவரின் நகர்பேசி வழியாக கூட்டணி தலைவருடன் பேசிய ‘கரம்’ கட்சி தலைவி, “யார் சொல்வதையும் நம்ப வேண்டாம். நாங்கள் சூரியக் கூட்டணியை விட்டுப் போகமாட்டோம்” என உறுதியளித்திருக்கிறாராம்.

மிரட்டும் ‘கரம்’காரர்கள்... சூரிய கட்சியின் ‘பிளான் பி’ | உள்குத்து உளவாளி
‘சீமைத்’ தலைவரின் திட்டமும் எதிர்பார்ப்பும் | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in