

“பிராமணக் கடப்பாரையால் பழைய திராவிடக் கோட்டையை தகர்ப்பேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் ‘சீமைத்’ தலைவர், தனது கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களில் சரி பாதி பேரை பெண்களாக நிறுத்தி புரட்சி செய்து வருகிறார். இம்முறையும் அதில் உறுதியாக இருக்கும் அவர், கூடுதல் சிறப்பாக பெண் வேட்பாளர்களில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கும் வாய்ப்பளிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.
இது தொடர்பாக தனது நட்பு வட்டத்தில் பேசியிருக்கும் அவர், “பிராமண சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்கள் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களாக இருந்தால் தகவல் சொல்லுங்கள்” என்று சொல்லி இருக்கிறாராம்.
விஷயம் கேள்விப்பட்டு இதுவரை, பிராமண சமூகத்தைச் சேர்ந்த மூன்று பட்டதாரி பெண்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ‘சீமைத்’ தலைவரிடம் பயோடேட்டா கொடுத்திருக்கிறார்களாம். அதேசமயம், தலைவர் எதிர்பார்க்கும் தகுதிகள் இல்லாமல் எக்கச்சக்கமான என்கொயரீஸ் வந்து கொண்டே இருக்கிறதாம்.