‘மாப்பிள்ளை சாரை’ சந்தித்த மைனாரிட்டி கட்சி | உள்குத்து உளவாளி

‘மாப்பிள்ளை சாரை’ சந்தித்த மைனாரிட்டி கட்சி | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

மரியாதை நிமித்தமாக முதன்மையானவரைச் சந்தித்துப் பேசியதாகச் சொல்லிய அந்த ‘மைனாரிட்டி’ கட்சி, அதற்கு முன்னதாகவே சூரியக் கட்சியின் ‘மாப்பிள்ளை சாரை’ வேறு மார்க்கத்தில் சந்தித்து மற்றதை எல்லாம் மங்களகரமாக பேசிமுடித்து விட்டதாம்.

3 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக ‘மைனாரிட்டி’ கட்சியின் அல்வா சிட்டி தலைவர் சொன்னாராம். “அத்தனை முடியுமா என்று தெரியாது. ஆனால், 2 வரைக்கும் என்னால் உத்தரவாதம் தரமுடியும்” என்று ’மாப்பிள்ளை சார்’ தரப்பில் உத்தரவாதம் அளித்தார்களாம்.

அதன்படி, ‘நல்லூர்’, ‘கோட்டை’ தொகுதிகளை தங்களுக்காக தரவேண்டும் என அல்வா சிட்டி தலைவர் அன்போடு கோரிக்கை வைத்தாராம். இப்படியான ஒரு மூவ் நடப்பதை தெரிந்து கொண்ட பனையூர் கட்சியில் இருக்கும் இன்னொரு ‘மாப்பிள்ளை சார்’ மைனாரிட்டி கட்சி மக்களுடன் தலைநகரில் தனியாக ஒரு சிட்டிங்கைப் போட்டாராம்.

அப்போது, “உங்களுக்கு 10 தொகுதிகள் வரைக்கும் என்னால் பேசி வாங்கித் தரமுடியும். அத்தோடு அந்தத் தொகுதிகளுக்கான செலவு உள்ளிட்ட சமாச்சாரங்களுக்கும் உங்களை கணிசமாகக் ‘கவனிக்க’ முடியும்” என்றெல்லாம் வாக்குறுதிகளை வாரி வழங்கி, ‘மைனாரிட்டி’ கட்சியினரை மதிமயங்க வைத்துவிட்டாராம் அந்த ‘மாப்பிள்ளை சார்’.

இதனால், இந்த சிட்டிங் நடந்ததில் இருந்து, “அவங்க தான் எல்லாத்தையும் பாத்துக்கிறதா சொல்றாங்கல்ல...” என்று மைனாரிட்டி கட்சிக்குள் சிலர் மாற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்களாம்.

‘மாப்பிள்ளை சாரை’ சந்தித்த மைனாரிட்டி கட்சி | உள்குத்து உளவாளி
‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி’ - பழனிசாமி குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in