‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி’ - பழனிசாமி குற்றச்சாட்டு

‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி’ - பழனிசாமி குற்றச்சாட்டு
Updated on
2 min read

‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி, வாரிசு அரசியலுக்கு 2026 தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதி​முக பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வ​ரு​மான பழனி​சாமி, ‘மக்​களைக் காப்​போம், தமி​ழ​கத்தை மீட்​போம்’ என்ற தலைப்​பில் தமி​ழ​கம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரு​கி​றார். அதன்​படி, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் நேற்று முன் தின​மும், நேற்​றும் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்ட பழனி​சாமி, நேற்று கும்​மிடிப்​பூண்டி சட்​டப்​பேரவை தொகு​திக்​குட்​பட்ட கவரைப்​பேட்​டை​யில் பேசி​ய​தாவது:

எம்​ஜிஆர் என்ற மாமனித​ரால் தோற்​று​விக்​கப்​பட்​டு, ஜெயலலி​தா​வால் கட்​டிக்​காக்​கப்​பட்ட அதி​முக அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் அதிக இடங்​களில் வென்​று, தனி பெரும்​பான்மை பெற்று ஆட்சி அமைப்​பதை எந்த கொம்​ப​னாலும் தடுக்க முடி​யாது. மக்​களுக்​காக வாழ்ந்து மறைந்த அதி​முக தலை​வர்​களுக்கு வாரிசு இல்​லை. மக்​கள் தான் வாரிசு. மக்​களுக்​காகத் தான் உழைத்​தனர். எந்த மாநிலத்​தி​லும் இல்​லாத அளவுக்​குத் திட்​டங்​களைக் கொடுத்​து, வளர்ந்த மாநில​மாக ஆக்​கிய​வர்​கள் அத்​தலை​வர்​கள்.

மற்ற தலை​வர்​கள், தங்​கள் குடும்​பத்​துக்​காக மட்​டும்​தான் சிந்​திப்​பார்​கள். தமி​ழ​கத்​தில் ஒரு கட்சி இருக்​கிறது. அக்​கட்​சி​யிலும், ஆட்​சி​யிலும் ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்​தவர்​கள் தான் பொறுப்​புக்கு வரமுடி​யும். ஆனால், அதி​முக ஜனநாயக இயக்​கம். சாதாரண தொண்​டர் கூட எம்​எல்​ஏ​வாக​வும், எம்​பி​யாக​வும், முதல்​வ​ராக​வும் முடி​யும். சாதாரண கிளைச் செய​லா​ள​ரால் பொதுச்​செய​லா​ளர் ஆக முடி​யும். உழைப்​புக்கு ஏற்ற பதவி வீட்​டுக்​கதவை தானாகவே தட்​டும்.

திமுக ஒரு கார்ப்​பரேட் கம்​பெனி. குடும்​பத்​தில் உள்​ளவர்​களுக்​குத்​தான் உச்​சபட்ச பதவி​கள். நாடாளு​மன்ற இரு அவைக்​கும் கனி​மொழி தான் தலை​வர், டி.ஆர்​.​பாலுவை எடுத்​து​விட்​டனர். அப்​படிப்​பட்ட கட்சி தமி​ழ​கத்​தில் தொடர வேண்​டு​மா? வாரிசு அரசி​யலுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்​போகிறது 2026 தேர்​தல். எம்​ஜிஆர், தீயசக்தி திமுக என்று குறிப்​பிட்​டார், அன்று முதல் இன்று வரை எவ்​வளவோ அவதா​ரம் எடுத்து திமுகவை வீழ்த்​திய கட்சி அதி​முக.

புதுசு புது​சாக சிலர் வரு​கி​றார்​கள், ஏதேதோ பேசுகி​றார்​கள். அதி​முக தான் எதிரி​களை வீழ்த்​தும் பலம் வாய்ந்த கட்​சி. 31 ஆண்​டு​கள் ஆட்சி செய்த அதி​முக எண்​ணற்ற திட்​டங்​கள் கொண்​டு​வந்​து, தமி​ழ​கம் இன்று இந்​தி​யா​வில் முதன்மை மாநில​மாக உயர்​வதற்கு அடித்​தளமிட்​டுள்​ளது.

திமுக ஆட்​சிக்கு வந்து 56 மாதங்​கள் உருண்​டோடி​விட்​டது. விவ​சா​யிகளுக்​கு, விவ​சா​யத் தொழி​லா​ளி​களுக்கு நன்மை செய்​தார்​களா...? இல்லை எல்லா துறை​களி​லும் சுரண்​டத்​தான் செய்​கி​றார்​கள். 8 கோடி மக்​களை சுரண்டி ஒரு குடும்​பம் செல்​வச் செழிப்​பில் இருக்​கிறது, அதுக்கு முடிவு​கட்​டும் தேர்​தல் இது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், எப்​போதும் மதவாதம் என்​கி​றார். எங்​களைப் பற்றி பேசுவதற்கு ஒன்​றும் கிடை​யாது, கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சியை பற்​றித் தான் பேசு​வார்​கள்​.

1999, 2001 ஆகிய தேர்​தல்​களில் பாஜக​வுடன் கூட்​டணி வைத்​து, மத்​தி​யில் ஆட்​சி​யிலும் திமுக பங்​கேற்​றது. முரசொலி மாறனை இலாகா இல்​லாத மந்​திரி​யாக வைத்​திருந்​தது. அப்​போதெல்​லாம் பாஜக நல்ல கட்​சி. அப்​போது விசிக​வும் பாஜகவோடு போட்​டி​யிட்​டது. (கருணாநி​தி, முரசொலி மாறன், வாஜ்​பாய் இருக்​கும் படத்தை காட்​டு​கி​றார்). இப்​படிப்​பட்ட ஒரு கட்சி அதி​முகவை விமர்​சனம் செய்​கிறது. பழைய விஷ​யங்​களை நினைத்​துப்​பார்க்க வேண்​டும் பச்​சோந்தி போல அவ்​வப்​போது நிறம் மாறக்​கூ​டாது. அடுத்​தாண்டு தேர்​தலில் எத்​தனை அவதா​ரம் எடுத்​தா​லும் திமுகவை வீழ்த்த மக்​கள் முடி​வெடுத்​து​விட்​டார்​கள்.

கள்​ளக்​குறிச்​சி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஒரு கதை சொன்​னார். நான் ஒரு கதை சொல்​கிறேன். திமுக என்ற எஞ்​சின் இல்​லாத காரை, 10 ஆண்​டு​களாக கூட்​டணி என்​கிற லாரி இழுத்​துக்​கொண்டு போய்க்​கொண்​டிருக்​கிறது. இப்​போது இந்த லாரி மக்​கர் செய்​கிறது. காங்​கிரஸ் கட்சி கூட்​டணி ஆட்​சி​யில் பங்கு கேட்​கிறது, மேலிடப் பொறுப்​பாளர் பேசுவதை வைத்து பிரச்னை ஆரம்​ப​மாகி​விட்​டது.

சூழ்​நிலைக்​கேற்ப முடி​வெடுப்​போம் என்று திருமா சொல்​கி​றார். வாக்​குறு​தி​களை திமுக நிறை​வேற்​ற​வில்லை என்று கம்​யூனிஸ்ட் சண்​முகம் சொல்​கி​றார். சில அமைச்​சர்​கள் 95 சதவீதம் வாக்​குறுதி நிறை​வேற்​றப்​பட்​டது என்​றும் சில அமைச்​சர்​கள் 99 சதவீதம் வாக்​குறுதி நிறை​வேற்​றப்​பட்​டது என்​றும் சொல்​வது பொய் என்று நாம் சொல்​ல​வில்​லை, சண்​முகம் சொல்​கி​றார். ஆக கூட்​ட​ணி​யில் புகைச்​சல் கிளம்​பி​விட்​டது. இந்த கூட்​டணி நிலைக்​குமா என்ற சந்​தேகம் மக்​களுக்கு வந்​து​விட்​டது. திமுக கூட்​டணி நிலைக்​​காது என்​ப​தற்கு இதுவே சான்​று. இவ்​​வாறு அவர் பேசி​னார்.

கூட்​டத்​தில் மாவட்ட செய​லா​ளர் சிறுணி​யம் பலரா​மன் திடீரென மயக்​கம் அடைந்து சரிந்​​தார். அவரை, பழனி​சாமி​யின் பாது​காவலர்​கள் பத்​திர​மாக மீட்​டனர்​.

‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி’ - பழனிசாமி குற்றச்சாட்டு
“விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது” - ஜான் பாண்டியன் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in