இடி​யாப்​பச் சிக்​கலில் சங்கரமான மக்​கள் பிரதிநிதி | உள்குத்து உளவாளி

இடி​யாப்​பச் சிக்​கலில் சங்கரமான மக்​கள் பிரதிநிதி | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

சபை​யில் மாற்​றுத் தலை​வ​ராக அங்​கீகரிக்​கப்​பட்​டிருக்​கும் சங்கரமான மக்​கள் பிர​தி​நிதி இடி​யாப்​பச் சிக்​கலில் மாட்​டிக் கொண்டு கிட்​டத்​தட்ட தலைமறைவு வாழ்க்கை வாழ்​கிறா​ராம். சங்கர​மானவர் ஏற்​கெனவே காதலியைக் கரம்​பிடித்​தவர். இருப்​பினும் திருமண பந்​தத்​தில் ஏதோ கொஞ்​சம் திகட்​டலாம். அதனால், விவ​காரம் விவாகரத்து வரைக்​கும் போயிருக்​கிற​தாம்.

இது தொடர்​பான வழக்கு இன்​னும் முடிவுக்கு வராத நிலை​யில், இன்​னொரு வாழ்க்​கைக்கு அடி​போட்டு விட்​டா​ராம் அண்​ணன். புதுசா வந்த பெண்​ணும் பொறுத்​துப் பொறுத்​துப் பார்த்​து​விட்​டு, “இன்​னும் எத்​தனை நாளைக்​குத்​தான் இப்​படியே வண்​டியை ஓட்​டுறது. எனக்கு ஒரு வழியச் சொல்​லுங்க. இல்​லாட்டி எனக்​குத் ‘தெரிஞ்ச’ வழியப் பாக்க விடுங்க” என்று தெலுங்கு வில்​லன் கணக்​காய் சிணுங்​கலாய் மிரட்​டி​னா​ராம்.

இப்​படியே விட்​டா, வண்டி முட்​டுச் சந்​துக்கு திரும்​பி​விடுமோ என மிரண்ட சங்​கர​மானவர், அன்​புக் காதலியை செந்​தூர் பக்​கம் கூட்​டிச் சென்று கந்​தன் சாட்​சி​யாக கரம்​பிடித்து விட்​டா​ராம்.

இருந்​தா​லும் இந்த நேரத்​தில் சொந்த ஊர்ப்​பக்​கம் திரும்​பி​னால் தேர் தெரு​வுக்கு வந்​து​விடும் என நினைத்து கந்​தன் காலடி​யிலேயே காவல் இருக்​கிறா​ராம். தொகு​திப் பக்​கமிருந்து யாராவது போன் போட்​டால், “மது​ராந்​தகம் எலெக் ஷன் டூட்​டில இருக்​கேன். எதுவா இருந்​தா​லும் வந்து பேசிக்​கலாம்” என்று சமாளிக்​கிறா​ராம்.

இதற்கு நடு​வில், யாராவது வீட்​டுப் பக்​கம் போய் குசலம் விசா​ரித்து குடும்​பத்​துக்​குள் கும்மி அடித்​து​விடக் கூடாது என்​ப​தற்​காக, “யா​ராக இருந்​தா​லும் அண்​ணனை பாக்​கணும்னா கட்சி ஆபீஸுக்கோ எம்​எல்ஏ ஆபீஸுக்கோ வந்து பாருங்க” என்று விசு​வாசிகள் விளம்​பரம் செய்​திருக்​கிறார்​களாம். இருந்​தா​லும் அண்​ணனுக்கு ஒத்​தாசை​யாக இருந்​தவர்​கள் ‘செந்​தூர் விவாகத்​தை’ “யாருக்​கும் தெரிய வேண்​டாம்” என்று சொல்​லிச் சொல்​லியே பலபேருக்கு பாஸ்​பண்​ணிக் கொண்​டிருக்​கிறார்​களாம். விஷ​யத்​தைக் கேட்​ட​வர்​கள், “ஏன்​டா... வடிவேலன் வதம் செஞ்ச இடமாச்​சேடா செந்​தூரு. நம்​மாளு அங்​கயா போகணும்​” என்​று சென்​டிமென்ட்​ வசனம்​ பேசுகிறார்​களாம்​.

இடி​யாப்​பச் சிக்​கலில் சங்கரமான மக்​கள் பிரதிநிதி | உள்குத்து உளவாளி
கரகாட்டக்காரன்: வைக்கோல் வாசம் வீசும் கிராமத்து நினைவுகள் | சினிமாபுரம் 11

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in